விளையாட்டாக DNA பரிசோதனை செய்துகொண்ட பெண்: தெரியவந்த அதிரவைக்கும் உண்மை
சும்மா விளையாட்டுக்காக DNA பரிசோதனை செய்துகொண்ட ஒரு பெண், பரிசோதனை முடிவுகள் கூறிய உண்மையால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
விளையாட்டாக DNA பரிசோதனை செய்துகொண்ட பெண்
அமெரிக்கர்களான Donna Johnson (47) Vanner (47) தம்பதியருக்கு Vanner Jr (18) மற்றும் Tim (12) என்னும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
தங்கள் பரம்பரை குறித்து அறிந்துகொள்வதற்காக, விளையாட்டாக DNA பரிசோதனை செய்துகொண்டுள்ளனர் டோனா குடும்பத்தினர்.
ஆனால், பரிசோதனை முடிவுகள் அந்தக் குடும்பத்தில் பெரும் குழப்பத்திற்கு வழிவகுத்துவிட்டன.
(Image: kutv)
ஆம், தம்பதியரின் இளைய மகனான டிம், வான்னருடைய மகன் அல்ல என்பது பரிசோதனை முடிவுகளில் தெரியவர, தம்பதியர் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டார்கள்.
நடந்தது என்ன?
டோனா வான்னர் தம்பதியர், இரண்டாவது குழந்தை பெறுவதில் பிரச்சினை இருந்ததால், செயற்கை கருவூட்டல் முறையில் முயற்சி செய்துள்ளனர்.
அப்போது, அதே சிகிச்சை மையத்துக்கு Devin மற்றும் Kelly என்னும் தம்பதியரும் செயற்கை கருவூட்டல் சிகிச்சைக்காக வர, சிகிச்சை மையத்தினர் இரண்டு பெண்களின் கருமுட்டைகளுடனும், டெவினுடைய உயிரணுக்களை தவறுதலாக இணைத்துள்ளனர்.
Image: kutv
ஆக, டோனாவின் இளைய மகனான டிம்முடைய உண்மையான தந்தை டெவின் என தெரியவரவே, அதிர்ச்சியடைந்த தம்பதியர் மன நல ஆலோசனை பெறும் நிலைக்கு ஆளாகியுள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து மகனுக்கு எதிர்காலத்தில் உண்மை தெரியவந்தால் என்ன ஆவது என பயந்து, டிம்முக்கு 12 வயதானதும், மெதுவாக அவனிடம் உண்மையைச் சொல்லியிருக்கிறார்கள் டோனாவும், வான்னரும்.
Image: kutv
அவன் தன் உண்மையான தந்தையை சந்திக்க விரும்ப, டோனா குடும்பத்தினர், டெவின், கெல்லி தம்பதியரை சந்தித்துள்ளனர். உண்மை இரண்டு குடும்பங்களையும் அதிர்ச்சியடைய வைக்க, தங்கள் மகனை தங்களிடமிருந்து பிரித்துவிடவேண்டாம் என டோனா டெவினிடம் கோர, இப்போது, இரண்டு குடும்பங்களும் நண்பர்களாகிவிட்டார்கள்.
Image: kutv
இரண்டு குடும்பங்களும் அவ்வப்போது சந்தித்து உறவாடிக்கொள்வதுடன், தங்கள் செயற்கை கருவூட்டல் சிகிச்சையில் குளறுபடி செய்த சிகிச்சை மையத்தையும் சும்மா விடாமல், அவர்களிடமிருந்து இழப்பீடும் பெற்றுள்ளார்கள்.