குப்பைத்தொட்டியில் இருந்து பெண்ணிற்கு கிடைத்த பொக்கிஷம்! கோடீஷ்வரியாக மாறிய ஆச்சரியம்
அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு குப்பைத்தொட்டியில் இருந்து பொக்கிஷம் கிடைத்துள்ளது. ஆம்! மேரி எலியட் என்ற பெண் குப்பை தொட்டியில் இருந்து கிளறி எடுத்த லொட்டரி சீட்டுக்கு $110,000 பரிசு விழுந்துள்ளது.
விர்ஜினியாவை சேர்ந்த மேரி தான் வாங்கிய லொட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்ததா என்பதை பார்க்காமலேயே குப்பைத்தொட்டியில் வீசியுள்ளார்.
பின்னர் ஒரு கட்டத்தில் அந்த எண்களுக்கு பரிசு விழுந்தது என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த மேரி குப்பைத்தொட்டியை கிளறி லொட்டரி சீட்டை எடுத்துள்ளார்.
அவர் பரிசைப் பெற டிக்கெட்டை எடுத்தபோது, மற்றொரு சிக்கல் ஏற்பட்டது. அதாவது காபி கறை சீட்டில் பட்டிருந்த காரணமாக பார்கோடு ஸ்கேன் செய்யப்படாத நிலை ஏற்பட்டது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக மேரிக்கு பரிசு விழுந்துள்ளதை லொட்டரி நிறுவன அதிகாரிகள் உறுதி செய்து அவரிடம் பரிசை கொடுத்தனர்.