மொபைலை பார்த்துக்கொண்டே... வயதான தம்பதியர் மீது காரை ஏற்றி துடி துடிக்க கொன்ற இளம்பெண்! சிசிடிவி-யில் பதிவான பதற வைக்கும் காட்சி
இந்திய தலைநகர் டெல்லியின் இளம்பெண் ஒருவர் சாலை ஓரத்தில் நடந்து சென்றுக்கொண்டிருந்த வயதான தம்பதியர் மீது காரை ஏற்றி கொன்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர வைத்துள்ளது.
டெல்லி துவாரகா பகுதியிலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. சிசிடிவி காட்சி பதிவான காட்சியில், சாலையில் வயதான தம்பதி நடந்து செல்லும் போது பின்னால் வந்த கார் அவர்கள் மீது மோதி இழுத்துச் செல்கிறது.
வாகனத்திலிருந்து இறங்கிய காரை ஓட்டி வந்த பெண் பதற்றமடைகிறார். உடனே அங்கு கூடிய மக்கள் காரை தூக்கி அடியில் சிக்கியிருந்த கணவரை வெளியே எடுத்துள்ளனர்.
மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில் தம்பதியினர் இருவரும் உயிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலியான கணவன்-மனைவி இருவரில் ஒருவர் மருத்துவர் எனவும், அவர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Watch : A senior citizen couple was crushed to death by a woman driver in #Delhi's Dwarka. #UserGeneratedContent pic.twitter.com/tb9o4I1eB6
— IndiaToday (@IndiaToday) April 6, 2021
விபத்தை ஏற்படுத்திய இளம்பெண்ணை பொலிசார் கைது செய்த நிலையில், அவர் ஜாமீனில் வந்துள்ளார்.
காரை ஓட்டி வந்த பெண், மொபைலை பார்த்துக்கொண்டே தம்பதி மீது ஏற்றியது பொலிசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.