ஆவிகள் வாழும் ஹொட்டலின் உரிமையாளரான பெண்... விருந்தினர்களைக் கடிக்கும் ஆவிகள்
ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக விளங்கிய ஹொட்டல் ஒன்று, இன்று ஆவிகள் நடமாடும் இடமாக மாறிவிட்ட நிலையிலும், அந்த ஹொட்டலிலேயே வாழ்கிறார் அதன் உரிமையாளரான பெண் ஒருவர்.
கடிக்கும், குத்தும், நகத்தால் பிறாண்டும் ஆவிகள்
அமெரிக்காவின் டெக்சாஸில் அமைந்துள்ளது The Baker Hotel. அதன் ஸ்பாவில் உள்ள தண்ணீர், நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது என கருதப்பட்டதால், அங்கு கூட்டம் அலைமோதுமாம்.
ஆனால், அதெல்லாம் ஒரு காலம். இப்போது அங்கு அபூர்வமாகத்தான் விருந்தினர்கள் வருகிறார்கள். அப்படி அபூர்வமாக வரும் விருந்தினர்களையும், அங்கு உள்ள ஆவிகள் கடிக்கவோ, பின்பக்கத்தில் குத்தவோ அல்லது நகத்தால் பிறாண்டவோ செய்கின்றனவாம்.
Image: thebakerhotelandspa / Instagram
உரிமையாளர் கூறும் காரணம்
அந்த ஹொட்டலின் உரிமையாளரான Kathy Estes, இன்னும் அந்த ஹொட்டலில்தான் வாழ்கிறார். இந்த ஆவிகள் இப்படி நடந்துகொள்வதற்கு காரணமும் கூறுகிறார் அவர்.
அதாவது, அந்த ஹொட்டலில் வாழும் ஆவிகள், அங்கு வரும் விருந்தினர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகத்தான் அவர்களை கடிக்கவோ, பின்பக்கத்தில் குத்தவோ அல்லது நகத்தால் பிறாண்டவோ செய்கின்றனவாம்.
Image: thebakerhotelandspa / Instagram
நாங்கள் இங்கு இருக்கிறோம், அல்லது இது எங்கள் இடம், நீங்கள் இங்கு வருவது எங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை தெரியப்படுத்துவதற்காகவே அவை விருந்தினர்களை தொந்தரவு செய்கின்றன என்கிறார் அவர்.
ஒன்றில், அவற்றிற்கு இங்கு அடைப்பட்டுக் கிடப்பது பிடிக்கவில்லை, அல்லது நீங்கள் அவை இருக்கும் இடத்துக்கு வருவது அவற்றிற்கு பிடிக்கவில்லை என்கிறார் Kathy.
Image: thebakerhotelandspa / Instagram