5 மொழிகளில் சரளமாக பேசி வடை பாவ் விற்கும் துணிச்சலான பெண்.., யார் இவர்?
பெண் ஒருவர் 5 மொழிகளில் பேசி வடை பாவ் விற்று வரும் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெண்ணிற்கு குவியும் பாராட்டு
தற்போதைய காலங்களில் ஆண்களை போலவே பெண்களும் சுயமாக தொழில் நடத்தி வருகின்றனர். அதில் சாதனையும் படைத்து வருகின்றனர். அந்தவகையில், மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தான் செய்யும் செயலுக்கு மற்றவருக்கு எடுத்துக்காட்டாக உள்ளார்.
இந்திய மாநிலமான மகாராஷ்டிரா, மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனது தாயின் ஊக்கமளிக்கும் கதையை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அதாவது தனது தாய் கடந்த 11 ஆண்டுகளாக BMC மருத்துவமனைக்கு வெளியே வடை பாவ் கடையை நடத்தி வரும் சம்பவம் குறித்து தான் LinkedIn தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இவரது தாயார் 5 மொழிகளில் பேசி வடை பாவ் கடையை நடத்தி வியாபாரம் செய்து வருவதாக பெருமையுடன் பகிர்ந்துள்ளார்.
மேலும், ஆரம்ப காலத்தில் இருந்து மருத்துவமனைக்கு வெளியே அவரை கடையை நடத்த விடாதது முதல் பொருட்கள் திருட்டு வரை பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.
இதையெல்லாம் அவர் யாரிடம் புகார் கொடுக்காமல் தன்னிடம் உள்ள உணவு தரமானது என்று மக்களிடம் நிரூபித்தார். தான் தயாரிக்கும் உணவு வீட்டில் இருந்து தாயார் செய்யப்படுகிறது என்ற கருத்தையும் கூறியுள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் பெண்ணின் தாயார் கல்வி கற்கவில்லை என்றாலும் மராத்தி, இந்தி, குஜராத்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழியை பேசுகிறார்.
இதனால் அவர் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு பேசி அவர்களிடம் கருணையுடன் நடந்து கொள்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |