பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த பெண்ணுக்கு கிடைத்துள்ள நல்ல செய்தி
கணவரையும் மகனையும் பிரித்தானியாவில் விட்டுவிட்டு, தான் மட்டும் நாடுகடத்தப்பட இருந்த ஒரு பெண்ணுக்கு நல்ல செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த பெண்
இத்தாலியக் குடியுரிமை பெற்றவரான Sumith Kodagoda Ranasinghage என்பவருக்கு, 2020ஆம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றிய குடியமர்தல் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட காலத்துக்கு பிரித்தானியாவில் வாழும் pre-settled status நிலை கிடைத்தது.
அதைத் தொடர்ந்து, அவரது மனைவியான Malwattege Peiris மற்றும் மகனான Kevin (10) ஆகியோரும், ஐரோப்பிய ஒன்றிய குடியமர்தல் திட்டத்தின் குடும்ப அனுமதி திட்டத்தின் கீழ் Sumithஉடன் இணைந்துகொள்ள விண்ணப்பித்தார்கள்.
கோவிட் காலகட்டம் காரணமாக அவர்களுடைய விண்ணப்பம் பரிசீலிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர். 2022ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், Sumith, Peiris மற்றும் Kevin ஆகியோர் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள்தான் என்பதற்கு சரியான ஆதாரம் இல்லை என்று கூறி, உள்துறை அலுவலகம் அவர்களுடைய விண்ணப்பங்களை நிராகரித்துவிட்டது.
அந்தக் குடும்பம் புலம்பெயர்தல் நீதிமன்றத்துக்குச் செல்ல, 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம், அந்தக் குடும்பம் உண்மையானதுதான் என்றும், அவர்கள் அனைவரும் பிரித்தானியாவில் சேர்ந்து வாழலாம் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
மீண்டும் குழப்பிய உள்துறை அலுவலகம்
இந்நிலையில், இந்த ஆண்டு, அதாவது, 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் திகதி, Peirisக்கு உள்துறை அலுவலகத்திடமிருந்து ஒரு கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில், அவர் ஐரோப்பிய ஒன்றிய குடியமர்தல் திட்டத்துக்கு தகுதிபெறவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து அக்குடும்பம் சார்பில், சட்டத்தரணியான Naga Kandiah, புலம்பெயர்தல் தீர்ப்பாயத்தின் முடிவை அமுல்படுத்தத் தவறிய உள்துறை அலுவலகத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்ல, நேற்று, அதாவது, வெள்ளிக்கிழமை, Peirisக்கு pre-settled status அளிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அலுவலகம் அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளது.
தன் கணவருடன், தானும் தன் மகனும் பிரித்தானியாவில் வாழலாம் என்று கூறும் உள்துறை அலுவலகத்தின் கடிதம் கிடைத்ததைத் தொடர்ந்து தாங்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள Peiris, இன்னும் சில நாட்களில் எங்கள் மகனுக்கு 11ஆவது பிறந்தநாள், ஆக, இரட்டை சந்தோஷத்தைக் கொண்டாட இருக்கிறோம் என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |