ரூ 24,000 கோடி மதிப்பிலான மாளிகையில் வசிக்கும் பெண்மணி: அவரது குடும்ப சொத்துக்களின் மதிப்பு
பரோடாவின் அரச குடும்பமான கெய்க்வாட்கள் மராட்டிய குலத்தின் வழித்தோன்றல்கள் ஆவார்கள். பரோடாவின் 16வது மகாராஜாவான ஹெச்.ஹெச். மகாராஜா சமர்ஜித்சிங்ராவ் கெய்க்வாட் கடந்த 2012 முதல் இந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.
வான்கனேர் அரச குடும்பம்
கடந்த 2002 பிப்ரவரி 27 அன்று அவர் ராஜ்குமாரி ரதிகராஜே கெய்க்வாட்டை மணந்தார். பரோடா அரச குடும்பத்தின் அடுத்த வாரிசாக ஸ்ரீமந்த் மகராஜ்குமாரி பத்மஜா ராஜே கெய்க்வாட் மற்றும் ஸ்ரீமந்த் மகராஜ்குமாரி நாராயணி ராஜே கெய்க்வாட் ஆகியோர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
ராதிகராஜே கெய்க்வாட் என்பவர் வான்கனேர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வாரிசாவார், வான்கனேர் சௌராஷ்டிராவில் உள்ள ஜாலா வம்சத்தின் ஒரு சுதேச மாகாணமாகும்.
இவர் டாக்டர் எம் கே ரஞ்சித்சிங் ஜாலாவின் மகள் ஆவார், அரச கௌரவம் மற்றும் ஆடம்பரங்களால் ஈர்க்கப்படாத ரஞ்சித்சிங் ஜாலா, யுபிஎஸ்சி தேர்வு எழுதுவதற்காக தனது அரச பட்டத்தை விட்டுவிட்டவர். பின்னர் ஐஏஎஸ் அதிகாரியானார்.
வனவிலங்குகளின் நலனுக்காக மட்டுமே பணியாற்றுவதற்காக அவர் தனது அரச குடும்ப அந்தஸ்தை விட்டுவிட்டார், மேலும் இந்தியாவின் வளமான வனவிலங்குகளைப் பாதுகாக்கவும் தனது வாழ்நாள் பங்களிப்பைச் செய்தார், இதன் காரணமாக அவருக்கு 'இந்தியாவின் சிறுத்தை மனிதன்' என்று பெயரிடப்பட்டது.
தனது தந்தைக்கிருந்த ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டு, ராதிகராஜே எழுத்து மீதான தனது ஆர்வத்தைத் தனது தொழிலாகத் தெரிவு செய்தார். அவர் பி.ஏ. வரலாறு (ஹானர்ஸ்) பட்டம் பெற்றார், அதன் பிறகு தி இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுத்தாளர் பணியைப் பெற்றார்.
ராதிகராஜே தனது குடும்பத்துடன் ஒரு பிரமாண்டமான மாளிகையில் வசிக்கிறார், இது உலகின் மிகப்பெரிய குடியிருப்பு மாளிகையாகும். 1890 ஆம் ஆண்டு மகாராஜா மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட் அவர்களால் கட்டப்பட்டது.
மதிப்பு ரூ.24,000 கோடிக்கு மேல்
அந்த காலகட்டத்தில் ரூ 27 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. வதோதராவில் அமைந்துள்ள லட்சுமி விலாஸ் அரண்மனை, கெய்க்வாட்களின் குடும்ப பாரம்பரியமாகும். பரோடா அரச குடும்பத்தினர் ரூ.20,000 கோடிக்கு மேல் சொத்துக்களை வைத்துள்ளனர்.
லட்சுமி விலாஸ் அரண்மனை பக்கிங்ஹாம் அரண்மனையை விட நான்கு மடங்கு பெரியது. இந்தோ-சாராசெனிக் கட்டிடக்கலை பாணியில் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்ட இந்த அரண்மனை 500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் 170 க்கும் மேற்பட்ட அறைகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு ரூ.24,000 கோடிக்கு மேல் என்றே கூறப்படுகிறது. இந்த அரண்மனையில் மோதி பாக் மாளிகை, மகாராஜா ஃபதே சிங் அருங்காட்சியகம் மற்றும் எல்விபி விருந்து கூடம் மற்றும் கருத்தரங்க மன்றம் உள்ளிட்ட வளாகங்களும் உள்ளன.
அரச மாளிகை வளாகத்தில் கோல்ஃப் மைதானம், கிரிக்கெட் மைதானம், நீச்சல் குளம் மற்றும் கிளப் ஹவுஸ் ஆகியவையும் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |