நண்பர் அளித்த தவறான தகவல்... கொலைப்பழியை சுமந்த பெண்: ரூ 288 கோடி இழப்பீடு அறிவிப்பு
தங்க இடமற்ற நபரைக் கொடூரமாகக் கொன்றதாக குறிப்பிட்டு தண்டனை அனுபவித்த லாஸ் வேகாஸ் பெண் ஒருவருக்கு ரூ 288 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
ஒரு ஒப்புதல் வாக்குமூலம்
தற்போது 41 வயதாகும் Kristin Lobato என்பவருக்கு 18 வயதாக இருக்கும் போதே Duran Bailey என்ற ஆதரவற்ற நபரை கொடூரமாகக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார்.
ஆனால் சம்பவம் நடக்கும் போது அவர் சுமார் 150 மைல்கள் தொலைவில் உள்ள Penaca என்ற பகுதியில் இருந்துள்ளார். நடந்த கொலையுடன் தொடர்பு படுத்துவதற்கான எந்த ஆதாரமும் இல்லாமல், அவர் ஏற்கனவே செய்த ஒரு ஒப்புதல் வாக்குமூலம் காரணமாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
Bailey கொல்லப்படும் பல மாதங்களுக்கு முன்னர் 2001 மே மாதம் கருப்பின நபர் ஒருவர் Lobato-வை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் அந்த தாக்குதலில் இருந்து தப்ப, அந்த நபரின் ஆணுறுப்பைத் துண்டித்துவிட்டதாக தமது நண்பர்கள் பலரிடம் Lobato கூறியிருக்கிறார்.
அந்த நண்பர்களில் ஒருவர் அளித்த தவறான தகவல் காரணமாகவே Bailey கொலை வழக்கில் Lobato பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், தம்மை சீரழிக்க முயன்ற நபரை தாக்கியதாக அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
அத்துடன் Bailey கொல்லப்படும்போது தாம் லாஸ் வேகாஸ் பகுதியில் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், ஒப்புதல் வாக்குமூலம் அளித்த காரணத்தால், அவர் குற்றவாளி என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
ஆனால் 2004ல் அந்த தீர்ப்பானது உண்மைக்கு புறம்பானது என குறிப்பிட்டு ரத்து செய்யப்பட்டது. 2006ல் Lobato வழக்கை மீண்டும் விசாரிக்கப்பட்ட நிலையில், அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு 13 முதல் 45 ஆண்டுகளுக்கு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் 2017ல் அமைப்பு ஒன்று இந்த வழக்கை விரிவாக ஆய்வுக்கு உட்படுத்த, அதன் தொடர்ச்சியாக அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினர். இதில் லாஸ் வேகாஸ் விசாரணை அதிகாரிகள் இருவர் மற்றும் நீதிபதி ஒருவர் போலி ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கபப்ட்டுள்ளது அம்பலமானது.
இதனையடுத்து 2017ல் அவருக்கு 35 வயதாக இருக்கும் போது Lobato விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் இழப்பீட்டு கேட்டு நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கில் நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்னர், இந்த வாரம் அவருக்கு 34 மில்லியன் டொலர், இந்திய மதிப்பில் ரூ 288 கோடி இழப்பீடாக வழங்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன் இந்த வழக்கில் திட்டமிட்டே Lobato-வை சிக்க வைக்க போலியான ஆதாரங்களை திரட்டிய முன்னாள் விசாரனை அதிகாரிகள் இருவரும் தலா 10,000 டொலர் இழப்பீடாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |