லண்டனில் இளம்பெண்ணை 40 முறை குத்திக் கொன்ற கொடூரம்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
பிரித்தானியாவில் முன்னாள் தோழியை 40 முறை கத்தியால் கொடூரமாக குத்திக் கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் தோழியை கொன்ற இளைஞர்
பிரித்தானியாவில் கடந்த மே மாதம் டென்னிஸ் அக்போமேடயே(Dennis Akpomedaye, 30) என்ற இளைஞர், 21 வயது போலந்து மாணவர் அன்னா ஜெடர்கோவியாக்(Anna Jedrkowiak) என்ற பெண்ணை மேற்கு லண்டனில் உள்ள ஈலிங்கில் வைத்து 40 முறைக்கு மேல் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இதற்காக அன்னா ஜெடர்கோவியாக்-வை சவுத் வேல்ஸின் நியூபோர்ட்டில் உள்ள அவரது வீட்டில் இருந்து இளைஞர் பின் தொடர்ந்து வந்துள்ளார்.
Metropolitan Police
மேலும் அனியா என அறியப்பட்ட அந்த பெண், லாஸ் இகுவானாஸ் உணவகத்தில் அவரது பணியை முடித்துவிட்டு வெளியே வரும் வரை காத்து இருந்துவிட்டு, பின் தொடர்ந்து சென்று இந்த கொடூர செயலை டென்னிஸ் அக்போமேடயே செய்துள்ளார்.
ஆயுள் தண்டனை
இந்நிலையில் டென்னிஸ் அக்போமேடயே-வுக்கு குறைந்தபட்சம் 29 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து கிங்ஸ்டன் கிரவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் இந்த நீதிமன்ற நிகழ்விற்கு டென்னிஸ் அக்போமேடயே கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Metropolitan Police
இதற்கிடையில் நீதிமன்றம் வழங்கும் தண்டனை கேட்டு எதிர்கொள்ள தைரியம் இல்லாத சரியான கோழை டென்னிஸ் அக்போமேடயே என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி Katarzyna Glowacka இகழ்ந்துரைத்துள்ளார்.