இந்த இலங்கை கிரிக்கெட் வீரரே என் குழந்தைக்கு தந்தை - நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண்
சமிக்கா கருணாரத்தின தான் என் குழந்தைக்கு தந்தை என பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது கவனம் பெற்றுள்ளது.
சமிக்கா கருணாரத்தின
29 வயதான சமிக்கா கருணாரத்தின, 2019 ஆம் ஆண்டில் இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

கடந்த 2022 ஆம் ஆண்டில், ஐசிசி விதிகளுக்கு முரணாக செயல்பட்டதாக கூறி, 5000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டதோடு, ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டார்.
இந்த சூழலில், சமிக்கா மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பெண் ஒருவர் தன்னுடைய 2மாத குழந்தைக்கு சமிக்கா தான் தந்தை எனவும், அவர் அந்த பொறுப்பை ஏற்க மறுப்பதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரான அந்த பெண், உடல்நலக்குறைவு காரணமாக சமிக்கா கருணாரத்தின நீதிமன்றத்தில் ஆஜராகவிலை என அதிகாரிகள் தெரிவித்ததாக அந்த பெண் கூறினார்.

மேலும், "சமிக்கா கருணாரத்தின தான் இந்த குழந்தைக்கு தந்தை, அவர் பொறுப்பை ஏற்க மறுத்ததால், தந்தைவழி பரிசோதனை கோரி நீதிமன்றத்திற்கு வர வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தக் குழந்தை இலங்கையில் வசிக்க வேண்டும். அவர்தான் தந்தை என்பது எனக்குத் தெரியும். அவர் தனது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எனக்கு வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியமோ அல்லது சமிக்கா கருணாரத்தினவோ எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமோ அளிக்கவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |