பணத்துக்காக அமெரிக்க பெண் செய்த இழிவான செயல்.. 6 ஆண்டுகளுக்கு பின் வெளிச்சத்திற்கு வந்த உண்மை!
அமெரிக்காவில் பெண் ஒருவர் மகளை போல் நடித்து பல லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Missouri பகுதியில் வசித்து வருபவர் Laura Oglesby. 48 வயது மதிக்கதக்க இவர், தனது மகளின் ஒரே ஒரு புகைப்படத்தை பயன்படுத்தி பல மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
2017ஆம் ஆண்டில் மகளின் போட்டோவை பயன்படுத்தி ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க சேர்ந்துள்ளார். அத்துடன் தான் ஒரு மாணவி என்று நம்ப வைத்து சுமார் 19 லட்சம் வரை கல்வி கடன் போன்றவை பெற்றுள்ளார்.
தனது மகளின் புகைப்படத்தை முக நூலில் பதிவு செய்து பல இளைஞர்களிடம் பேசி 5 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார். கடைசியாக இவர் வசித்து வந்துள்ள வீட்டில் இருந்தவர்களிடம் தான் கணவரால் குடும்ப வன்முறையை சந்தித்த பெண் என்று கூறி ஏமாற்றியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர்கள் Laura Oglesby மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர்.
அதன் பெயரில் பொலிஸ் இவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில் அவர் இந்த செயலை 2016 அதாவது, 6 வருடமாக செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து Laura தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி Laura Oglesbyக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்தார். மகளை போல் நடித்து ஏமாற்றிய குற்றத்திற்கு மகளுக்கும் பல்கலைக்கழக்கத்திற்கும் சேர்த்து 13 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கோரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.