உலகின் முதல் விண்வெளி குற்றம் - பொய் கூறிய பெண்ணுக்கு 5 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு
முதல் விண்வெளி குற்றம் என கருதப்பட்ட வழக்கில் தான் கூறியது பொய் என விண்வெளி வீராங்கனை ஒப்புக்கொண்டுள்ளார்.
முதல் விண்வெளி குற்றம்
அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீராங்கனையான ஆன் மெக்லைன்(Anne McClain) என்ற பெண், தனது சக விண்வெளி வீராங்கனையான சம்மர் வார்டன் என்பவரை 2014 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.
2019 ஆம் ஆண்டில் விவாகரத்து பெறப்போவதாக கூறி, இருவரும் பிரிந்து வாழ தொடங்கினர்.
இதனையடுத்து, விண்வெளி பயணத்தில் இருந்த போதுமெக்லைன் சட்டவிரோதமாக தனது தனிப்பட்ட வங்கி கணக்கை அணுகியதாக கூறி, ஃபெடரல் டிரேட் கமிஷன் மூலம் சம்மர் வார்டன் புகார் அளித்தார்.

விண்வெளியின் முதல் குற்றம் என கருதப்பட்ட இந்த வழக்கு பெருமளவில் கவனம் பெற்றது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், பகிரப்பட்ட நிதி திட்டம் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்னரே தனது வங்கி கணக்கை அணுக மெக்லைனுக்கு அனுமதி வழங்கியதை கண்டறிந்தனர்.
மேலும், இதில் தவறு செய்ததாகவோ அல்லது அங்கீகாரமற்ற அணுகலோ இல்லை என தெரிவித்தனர்.

இதனையடுத்து, 2020 ஆம் ஆண்டில் வெளியான குற்றப்பத்திரிகையில், வார்டன் தெரிவித்த புகாரில் உள்ளவை அனைத்தும் பொய்யானவை, வேண்டுமென்றே அதிகாரிகளுக்கு தவறான தகவல்களை வழங்கியுள்ளார் என குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.
5 ஆண்டு சிறை?
இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில், தான் கூறியது பொய் என வார்டன் ஒப்புக்கொண்டுள்ளார்.
குற்ற ஒப்புதல் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கான தண்டனை விவரம் பிப்ரவரி 2026 ஆம் ஆண்டில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார்டனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 2,50,000 டொலர்(இந்திய மதிப்பில் ரூ.2.21 கோடி) அபராதம் விதிக்கப்படலாம் எனகூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |