வீட்டு கழிப்பறைக்குள் உயிரிழந்த இளம்பெண் விமானப்படை அதிகாரி! ஒரு எச்சரிக்கை தகவல்
நைஜீரியாவில் பெண் விமானப்படை அதிகாரி ஒருவர் வீட்டு கழிப்பறையில் பாம்பு கடித்ததில் உயிரிழந்துள்ளார்.
தலைநகர் அபுஜாவை சேர்ந்தவர் லான்ஸ் பெர்சி. இளம்பெண்ணான இவர் விமானப்படை அதிகாரி ஆவார்.
இந்த நிலையில் தனது வீட்டு வெஸ்டர்ன் கழிப்பறை மீது லான்ஸ் உட்கார்ந்திருந்த போது அவரை பாம்பு கடித்தது. இதில் விஷம் அவர் உடல் முழுவதும் ஏறிய நிலையில் லான்ஸ் உயிரிழந்தார்.
இந்த தகவலை அவரின் தோழி உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், நேற்று காலையில் நாம் இருவரும் பேசியது கூட நினைவில் உள்ளது, இப்போது நீ உயிருடன் இல்லை.
இதை நினைத்தால் என் இதயத்தில் இருந்து இரத்தம் வடிகிறது.
உங்கள் வீடு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருங்கள் என பதிவிட்டுள்ளார்.