மரண தண்டனை அல்லது 99 முறை சவுக்கடி..! நடன ரீல்ஸ் பதிவிட்ட இளம் பெண்கள் கைது
ஈரானில் நடன வீடியோ பதிவிட்ட இளம் பெண்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நடனமாடிய பெண்கள் கைது
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள புனித பாதுகாப்பு போர் நினைவிடத்தில் நடனமாடிய இரண்டு இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பெண்கள் தங்களது நடன ரீல்ஸ் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததற்காக கடுமையான தண்டனை எதிர்நோக்க நேரிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான்-ஈராக் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட இடத்தில் நடனமாடியதும், நாட்டின் ஆடை கட்டுப்பாடுகளை மீறி வீடியோ பதிவு செய்ததும் இவர்கள் கைதுக்கு காரணமாக கூறப்படுகிறது.
ஈரான் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த பெண்களின் செயல் பொது ஒழுங்கை கெடுப்பதாக கருதப்படுகிறது. அத்துடன் சம்பந்தப்பட்டவர்களின் கணக்குகள் மூடப்பட்டுள்ளது.
99 முறை சவுக்கடி
இந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை மீதான தாக்குதல் என இது கருதப்படுகிறது.
மேலும் இந்த பெண்களுக்கு மரண தண்டனை அல்லது 99 முறை சவுக்கடி விதிக்கப்படலாம் என்ற தகவல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |