மன்னரைக் கட்டியணைக்க முயன்ற பெண்ணுக்கு தண்டனை
மலேசியாவில் மன்னரைக் கட்டியணைக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னரைக் கட்டியணைக்க முயன்ற பெண்
மலேசியாவில், ஆகத்து மாதம் 31ஆம் திகதி, சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்திருக்கின்றன.
தேசிய கீதம் பாடப்படும்போது, திடீரென மன்னர் Perak Sultan Nazrin Shahஐ நோக்கி ஒரு பெண் ஓடியுள்ளார்.
அவர் மன்னரைக் கட்டியணைக்க முயல, உடனடியாக மன்னரின் பாதுகாவலர்கள் அவரை கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளார்கள்.
அந்தப் பெண்ணின் பெயர் Nurhaswani Afni Mohamad Zorki (41). அவர் மீது மலேசிய சட்டப்படி தாக்குதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் schizophrenia என்னும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுவதால், அவரை விசாரணைக்குட்படுத்த முடியுமா என்பதை அறிவதற்காக அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் நிலையில், Nurhaswani மூன்று மாதங்கள் வரை சிறையில் அடைக்கப்படுவதுடன் 1,000 Malaysian Ringgit அபராதமும் செலுத்தவேண்டிவரலாம். இலங்கை மதிப்பில் அது 71,489.64 ரூபாய் ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |