சுவிஸ் விமான நிலையத்தில் சிக்கிய வெளிநாட்டுப்பெண்: தொடர்ந்த துரதிர்ஷ்டம்
சுவிட்சர்லாந்தின் சூரிக் விமான நிலையத்தில் பிரேசில் நாட்டுப் பெண்ணொருவரின் உடைமைகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது அவர் போதைப்பொருள் ஒன்றைக் கடத்திவந்தது தெரியவந்தது.
ஸ்கேனரில் தெரிந்த காட்சி
இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 2ஆம் திகதி, பிரேசில் நாட்டவரான பெண்ணொருவர் சாவோ பாவுலோ நகரிலிருந்து நள்ளிரவு வாக்கில் சூரிக் விமான நிலையம் வந்தடைந்துள்ளார்.
அவரது சூட்கேசில் போலியான அடிப்பாகம் ஒன்று இருப்பதை ஸ்கேனர் காட்டிக்கொடுக்க, அதிகாரிகள் உஷாராகியுள்ளார்கள்.
சோதனையில், அந்த சூட்கேஸின் அடிப்பகுதியில், வெளியில் தெரியாதவகையில் போதைப்பொருள் ஒன்றை அந்த 42 வயதுப் பெண் மறைத்துவைத்துக் கொண்டுவந்தது தெரியவந்தது.
துரதிர்ஷ்டவசமாக, அவரது இரண்டாவது சூட்கேஸ் உடைமைகள் வைக்கும் இடத்திலேயே சிக்கிக்கொள்ள, மறுநாள் அதையும் கைப்பற்றிய அதிகாரிகள் அந்த சூட்கேசை சோதனையிட, அதற்குள்ளும் போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
மொத்தம் 10 கிலோ போதைப்பொருளை அந்தப் பெண் சுவிட்சர்லாந்துக்குள் கொண்டுவந்துள்ளார்.
அவரைக் கைது செய்துள்ள அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |