முடி திருத்தும் பெண்ணிற்கும் அவர் வாடிக்கையாளருக்கும் நடைபெற்ற காதல் திருமணம்! அழகிய புகைப்படங்கள்
நைஜீரியாவில் வாடிக்கையாளரை திருமணம் செய்த முடிதிருத்தம் செய்யும் பெண்.
3 ஆண்டுகள் காதல் திருமணத்தில் முடிந்த அழகிய தருணம்
முடிதிருத்தும் பணியில் உள்ள பெண்ணை அவரின் வாடிக்கையாளரான கோடீஸ்வர இளைஞர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
நைஜீரியா நாட்டின் Owerri நகரை சேர்ந்த இளம்பெண் முடிதிருத்தும் பணி செய்து வருகிறார். அவரிடம் கோடீஸ்வர இளைஞர் ஒருவர் அடிக்கடி வந்து தலைமுடியை வெட்டி கொண்டு அழகுப்படுத்தி செல்வார்.
இதையடுத்து இருவருக்கும் இடையே நட்பாகி பின்னர் டேட்டிங் சென்றனர். ஒரு கட்டத்தில் உயிருக்கு உயிராக இருவரும் காதலிக்க தொடங்கினர்.
இதையடுத்து அவர்களுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
TikTok@herroyalmajesty00. Source: UGC
மணப்பெண் கூறுகையில், அவருக்கு முடி திருத்தம் செய்யும் பணியின் போது தான் எங்களுக்குள் நட்பு தொடங்கியது. பின்னர் அது காதலாகி மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் மண வாழ்வில் இணைந்துள்ளோம்.
இப்போது என் விருப்பமான வாடிக்கையாளர் என் கணவர் தான் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
skabash