விமானத்தில் கும்பலாக ஏறி இருக்கையை தேடிய இளம்பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி! வைரல் வீடியோ
சுற்றுலா செல்வதற்காக தோழிகள் விமானத்தில் ஏறிய நிலையில் அவர்கள் எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
Daisy Barr என்ற பெண் தனது தோழிகளுடன் ஈசிஜெட் விமானத்தில் ஏறினார். விமான டிக்கெட்களில் 26வது வரிசை என இருந்த நிலையில் தங்கள் இருக்கைகளை தேடிய போது அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஏனெனில் 26வது வரிசையில் இருக்கைகள் இல்லாமல் நிற்க மட்டுமே இடம் இருந்தது. இதையடுத்து அந்த பெண்களில் ஒருவர் அந்த இடத்தில் அப்படியே கீழே உட்கார்ந்தார்.
உடனிருந்த தோழிகள் காலியாக உள்ள விமான இருக்கைகளில் உட்கார்ந்தனர். இது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. இது குறித்து Daisy தெரிவிக்கையில், விமான பயணத்தின் போது நாங்கள் நிற்கவில்லை. சில காலி இருக்கைகளைக் கண்டு உட்கார்ந்தோம், யாரும் எங்களுக்கு உதவவில்லை, அதிர்ஷ்டவசமாக சில இருக்கைகள் இருந்தன என தெரிவித்துள்ளார்.
இருக்கைகள் சர்ச்சை தொடர்பில் ஈசிஜெட் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், இந்த கோடையில் சில விமானங்களில் இருக்கை அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, எனவே நாங்கள் இந்த வாடிக்கையாளர்களுக்கு புதிய இருக்கைகளை மீண்டும் வழங்கினோம், அவர்கள் திட்டமிட்டபடி பறந்தனர் என விளக்கமளித்துள்ளார்.