ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் பெறலாம்! பெண்கள் சுயதொழில் தொடங்க இந்திய அரசின் திட்டம்
இந்தியா முழுவதும் உள்ள 3 கோடி பெண்களை தொழில் முனைவோராக மாற்றுவதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.
பெண்களுக்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்தவகையில் பெண்கள் சுய தொழில் புரிவதற்கும், அவர்களுக்கு நிதிப் பாதுகாப்பு அளிப்பதற்கும் இந்திய அரசு வட்டியில்லா கடனை வழங்குகிறது.
லக்பதி திதி (Lakhpati Didi ) திட்டம்
லக்பதி திதி (Lakhpati Didi ) திட்டம் மூலம் 3 கோடி பெண்களை தொழில் முனைவோராக மாற்றுவதை இந்திய அரசு நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடனை பெறலாம். இந்தியாவில் உள்ள 83 லட்சம் சுய உதவி சங்கங்களில் 9 கோடிக்கும் அதிகமான பெண்கள் அங்கம் வகிக்கின்றனர்.
லக்பதி திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 வரை கடன் வழங்கப்படுகிறது. முக்கியமாக இந்த திட்டத்தில் கடன் வழங்குவது மட்டுமல்லாமல் பொருட்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்ப அறிவு, பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதனால் பெண்கள் சுயமாக தொழில் செய்து தயாரிக்கப்படும் பொருட்களை துறைசார் விற்பனை நிலையங்கள் மற்றும் கண்காட்சிகளில் விற்பனை செய்து வருமானம் பெறுகின்றனர்.
பெண்களுக்கு வேலை வாய்ப்பு, வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் உள்ளிட்டவற்றை நோக்கமாக லக்பதி திதி (Lakhpati Didi ) திட்டம் கொண்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
* இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் கிராமப்புற பெண்களின் வயது 18 முதல் 50 வயதுக்குட்பட்டு இருக்க வேண்டும்.
*விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
* லக்பதி யோஜனா இணையதளம் மூலம் ஓன்லைனில் விண்ணபிக்கலாம்.
* சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று ஆஃலைனில் விண்ணபிக்கலாம்.
* இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், சுய உதவி குழு உறுப்பினர் சான்றிதழ் ஆகியவை வேண்டும்.