துப்பாக்கியால் பொலிஸாரை சுட்டுவிட்டு தப்பியோடிய பெண் கொள்ளையர்கள்! 101 வயது முதியவருக்கு நேர்ந்த சோகம்
அமெரிக்காவில் அதிவேகமாக கார் மோதிய விபத்தில் சிக்கிய இரண்டாம் உலகப்போர் வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கார் விபத்தில் போர் வீரர் படுகாயம்
கடந்த மார்ச் 1ஆம் திகதி, லாஸ் வேகாஸின் ஹெண்டர்சனில் நிறுத்தப்பட்ட காரில் ஹெர்பர்ட் மஸ்கின் அமர்ந்திருந்தார். இவர் இரண்டாம் உலகப்போரில் ஈடுப்பட்ட வீரர் ஆவார்.
அப்போது அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று மஸ்கின் கார் மீது பலமாக மோதியது. இதில் மஸ்கின் மற்றும் அவரது மனைவி ஷெர்ரி படுகாயம் அடைந்தனர். குறிப்பாக மஸ்கினுக்கு கழுத்து முதுகெலும்பு முறிந்தது.
பரிதாப பலி
அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்றைய தினம் உயிரிழந்தார். அவரது இறப்புக்கான காரணம் மற்றும் விதம் பற்றிய கூடுதல் விவரங்கள் வழங்கப்படவில்லை.
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை இயக்கிய லோரெய்ன் அல்வாரடோ (32), கஸாண்ட்ரா அல்வாரெஸ் (29) ஆகிய இளம்பெண்கள் அப்போதே கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட பின், பொலிசாரிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். குறித்த பெண்கள் இருவரும் பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.