பல லட்சம் செலவு செய்து நண்பரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி! எச்சரிக்கை செய்தி
லட்சக்கணக்கான பணத்தை உதவியாக கொடுத்து ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்பிய பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் வெளிநாட்டில் இருக்கும் மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தின் குமுளூரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரது மனைவி மீனா இவர்களுக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். குடும்பத்தாரை நன்றாக வைத்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பாலசுப்ரமணியன் மலேசியாவுக்கு வேலைக்கு சென்றிருக்கிறார்.
இந்த நிலையில் மீனாவுக்கு ஸ்மார்ட்போன் மூலம் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தானும் வெளி நாட்டில் வேலை பார்க்க விரும்புவதாகவும் அங்கு செல்வதற்கு பணம் கொடுத்து உதவும் படியும் கேட்டுள்ளார்.
இதையடுத்து நண்பருக்கும் தான் செய்யும் உதவி உபத்திரமானதாக மாறும் என்பதை அறியாத மீனா லட்சங்களில் பணம் கொடுத்துள்ளார். பின்னர் சுரேஷ் வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறார். இதன்பிறகு மீனா தான் கொடுத்த பணத்தை திருப்பி அனுப்புமாறு கேட்டுள்ளார்.
அதற்கு சுரேஷ் பணம் வேண்டுமானால் வீடியோ அழைப்பில் வர வேண்டும் என தவறாக அணுகியுள்ளார். இதற்கு மீனா சம்மதிக்காத நிலையில் மீனாவை தொடர்பு கொண்டு, நாம் இருவருக்கும் காதல் இருப்பதாகவும், நீ தான் என்னை வெளிநாட்டுக்கு பணம் செலவழித்து அனுப்பி வைத்தாய் என்றும் இங்கு வேலை பார்க்கும் உனது கணவரிடம் சொல்லி உன் வாழ்க்கையை சீரழித்து விடுவேன், உனது பணமும் கிடைக்காது என்று பிளாக் மெயில் செய்துள்ளான்.

இதனால் தான் ஏமாந்து போனதை உணர்ந்த மீனா ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானார். இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்த அவர் இறப்பதற்கு முன்னர் வீடியோவையும் மரண வாக்குமூலமாக பதிவு செய்திருக்கிறார்.
மனைவியின் நடத்தை குறித்து ஊரார் நாலுவிதமாக பேசியதால் அதிருப்தி அடைந்த கணவர் பாலசுப்பிரமணியம் , மனைவியின் இறப்புக்கு வராததால் உறவினர்கள் மீனாவின் சடலத்தை பிணகூறாய்வுக்கு பின் தகனம் செய்து விட்டனர்.
இந்த நிலையில் நேற்று பாலசுப்ரமணியன் அனைத்தையும் அறிந்து சுரேஷ் மீது பொலிசில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து வெளிநாட்டில் உள்ள சுரேஷ் மற்றும் அவரது தாய் தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் மீது 8 பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் உயிரை மாய்த்து கொண்டுள்ள மீனாவின் வாழ்வில் நடந்த சம்பவத்தை நாம் எச்சரிக்கை செய்தியாகவே எடுத்து கொள்ள வேண்டியுள்ளது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        