காரால் இழுத்துச் சென்ற முன்னாள் காதலன்: ஒரு மாதம் கோமாநிலை..கிறிஸ்துமஸ் ஈவ் அன்று உயிரிழந்த சோகம்
பிரேசிலில் ஒரு மாத கால கோமாவில் இருந்த இரண்டு பிள்ளைகளின் தாய், கிறிஸ்துமஸ் ஈவ் அன்று உயிரிழந்தார்.
கோமா நிலை
பிரேசில் நாட்டின் ஸா பாலோவில் கடந்த நவம்பர் 29ஆம் திகதி, டய்னாரா சௌசா சாண்டோஸ் என்ற 31 வயது பெண் மீது கார் ஒன்று மோதியது.
மேலும், அவர் காரால் இழுத்துச் செல்லப்பட்டதில் படுகாயமடைந்து கால்கள் துண்டிக்கப்பட்டதுடன் கோமா நிலைக்கு சென்றார்.
இரண்டு குழந்தைகளின் தாயான டய்னாரா, தனது முன்னாள் காதலர் சில்வாவினால் இந்த நிலைக்கு ஆளானார்.
உயிரிழப்பு
நவம்பர் 30ஆம் திகதி கைது செய்யப்பட்ட அந்நபர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கிறிஸ்துமஸ் ஈவ் அன்று டய்னாரா சௌசா சான்டோஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது தாயார் லூசியா தனது மகளின் மரணத்திற்குப் பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |