ஆண்களை உற்சாகப்படுத்த பெண்கள் இதை செய்ய வேண்டும்: CEO-வின் கட்டளையால் ஊழியர்கள் அதிர்ச்சி
சீனாவில் செயல் அதிகாரி ஒருவர் நிறுவனத்தின் ஆண் ஊழியர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பெண் ஊழியர்கள் நல்ல மேக்கப் போட்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
செயல் அதிகாரியின் உத்தரவு
சீனாவின் பிரபல நிறுவனம் ஒன்றின் செயல் அதிகாரியான லாவோ என்ற நபர், 5 பெண் ஊழியர்கள் வரை இருந்த நிறுவனத்தின் வீ சாட் குரூப்-ல் பேசியது வைரலாகி வருகிறது.
அதில், பெண் ஊழியர்கள் நன்றாக மேக்கப் போட்டுக் கொள்ள வேண்டும், அப்போது தான் ஆண் ஊழியர்கள் உற்சாக செயல்படுவார்கள்.
இதற்கு மாற்றாக ஆண் ஊழியர்கள் கிரவுட் பண்டிங் மூலம் பணத்தை திரட்டி மாலை டீ-க்கு அழைத்து செல்வார்கள் என தெரிவித்துள்ளார்.
கோபமடைந்த ஊழியர்கள்
செயல் அதிகாரியின் பேச்சால் கோபமடைந்த ஊழியர்கள் இதற்கு பதில் எதுவும் வழங்கவில்லை. உடனே செயல் அதிகாரியான லாவோ, ஊழியர்களை பேசவைக்க போனஸ் வேண்டும் என்றால் ரிப்ளை செய்யுங்கள் என மறைமுகமாக மிரட்டியுள்ளார்.
அதற்கும் ஊழியர்கள் யாரும் பதில் அளிக்காததால், பதில் கூறுங்கள்.. பதில் அளிக்காதவர்களின் போனஸ் குறைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் .
இந்த உரையாடலை நிறுவனத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர் சோசியல் மீடியாவில் பதிவு செய்ததை அடுத்து செயல் அதிகாரிக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
இதையடுத்து விளக்கமளித்துள்ள லாவோ, நான் ஆண் ஊழியர்களை உற்சாகப் படுத்துவதற்காக எந்த பெண் ஊழியரையும் மேக் அப் போட வலியுறுத்தவில்லை.
காமெடிக்காக கூறினேன் அந்த உரையாடல் கூட தற்போது நீக்கப்பட்டு விட்டது, இது எதுவுமே விஷயம் இல்லை என்று ஊழியர்களுக்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |