ஐரோப்பிய கால்பந்து கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து மகளிர்படை: கிடைத்த மிகப்பெரிய பரிசுத்தொகை
சுவிஸில் நடந்த மகளிர் ஐரோப்பிய கால்பந்து கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி மிகப்பெரிய பரிசுத்தொகையை பெற்றது.
இங்கிலாந்து சாம்பியன்
2025 மகளிர் ஐரோப்பிய கால்பந்து கிண்ணத் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.
இத்தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின.
சமபலத்துடன் இரு அணிகளும் மோதியதால் போட்டி 1-1 என டிரா ஆனது.
இதனால் பெனால்டிஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட, இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.
பரிசுத்தொகை
இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக UEFA ஐரோப்பா கால்பந்து சாம்பியன்ஷிப் கிண்ணத்தை கைப்பற்றியது.
இதன்மூலம் இங்கிலாந்து அணி இந்திய மதிப்பில் ரூ.51 கோடி பரிசுத்தொகையை பெற்றது. இதில் போட்டி கட்டணம், லீக் வெற்றி, கிண்ணத்திற்கான பரிசு ஆகியவை அடங்கும்.
இது கடந்த சீசன்களை விட அதிகமான பரிசுத்தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |