படுக்கைக்கு அடியில் வசித்த 18 பாம்புகள் அடங்கிய குடும்பம்! தலைமுடி குவியல் என நினைத்த பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
அமெரிக்காவில் தனது படுக்கைக்கு கீழே 18 பாம்புகள் அடங்கிய பாம்பு குடும்பம் வசித்து வந்ததை கண்டு பெண் அதிர்ச்சியடைந்தார்.
ஜார்ஜியாவை சேர்ந்தவர் திரிஷ். இவர் தனது கணவருடன் ஒரு வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் திரிஷ் சமீபத்தில் தனது படுக்கையை தூக்கி பார்த்தார்.
அப்போது கீழே ஏதோ குவியலாக இருந்தது. சரி அது தலைமுடிகளாக இருக்கும் என நினைத்திருந்த திரிஷுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
ஏனெனில் அங்கு தாய் பாம்பு மற்றும் அதன் 17 குட்டிகளும் இருந்தது தெரியவந்தது. இந்த சமயத்தில் திரிஷின் கணவர் மேக்ஸும் உடன் இருந்த நிலையில் இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் பெரிய கொம்பை பயன்படுத்தி மேக்ஸ் அனைத்து பாம்புகளை பிடித்து ஒரு பைக்குள் போட்டு அருகில் இருந்த ஓடையில் விட்டார்.
திரிஷ் கூறுகையில், வீட்டில் இப்போது எங்கு உட்கார்ந்தாலும் ஒரு விதமான பயம் இருக்கிறது. இவ்வளவு பாம்புகளை ஒன்றாக பார்த்தது பீதியான அனுபவம் என கூறியுள்ளார்.
இதனிடையில் பாம்பு பிடிப்பதில் வல்லவரான நபர் ஒருவர் திரிஷ் வீட்டில் வந்து அங்கு வேறு பாம்புகள் இல்லை என்பதை உறுதி செய்துள்ளார்.