50 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த பெண்ணை வலை வீசி தூக்கிய தீயணைப்பு வீரர்கள்! வைரலாகும் திக் திக் வீடியோ
கேரளாவில் கிணற்றுக்குள் விழுந்த பெண்ணை தீயணைப்பு துறையினர் மீட்கும் திக் திக் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
கேரளாவின் வயநாட்டில் உள்ள 50 அடி ஆழ கிணற்றுக்குள் பெண்ணொருவர் விழுந்திருக்கிறார். இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் ஊர் மக்கள் உதவியுடன் பெண்ணை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
அதன்படி கயிறு மற்றும் வலை ஆகியவற்றை பயன்படுத்தி அந்த பெண்ணை அதற்குள் வரவழைத்து மேலே தூக்கினார்கள், மீண்டும் அவர் தண்ணீருக்குள் விழாதவாறு ஜாக்கிரதையாக தூக்கி வெளியில் கொண்டு வந்தனர்.
இதற்கு பின்னர் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் அப்பெண் எழுந்து நின்றார்.
இந்த சம்பவத்தில் கிணற்றுக்குள் விழுந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டதா என்ற விபரம் தெரியவில்லை. இது தொடர்பான வீடியோ டுவிட்டரில் வெளியாகி அதிகளவில் பார்வையாளர்களை பெற்று வைரலாகியுள்ளது.
இதனிடையில் அப்பெண்ணை பத்திரமாக கிணற்றில் இருந்து மீட்ட தீயணைப்பு வீரர்களை பலரும் பாராட்டியுள்ளனர்.
#WATCH | Kerala: Fire Department officials and locals rescued a woman after she fell into a 50-feet deep well in Wayanad (10.08) pic.twitter.com/5tG6Jq0vx3
— ANI (@ANI) August 10, 2021