304 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி! அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்து..வரலாறு படைத்த இந்தியா
Sivaraj
in கிரிக்கெட்Report this article
ராஜ்கோட்டில் நடந்த ஒருநாள் போட்டியில், மகளிர் இந்திய அணி 304 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.
கடைசி ஒருநாள் போட்டி
இந்தியா மற்றும் அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடந்தது.
முதலில் ஆடிய இந்திய அணி 435 ஓட்டங்கள் குவித்தது. ப்ரதிகா ராவல் 154 ஓட்டங்களும், ஸ்ம்ரிதி மந்தனா 135 ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணி 100 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையில் இருந்தது. ஆனால், அடுத்து 31 ஓட்டங்கள் எடுப்பதற்குள் மீதமுள்ள விக்கெட்டுகளை பறிகொடுத்து 131 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக சாரா போர்ப்ஸ் 41 ஓட்டங்களும், ஓர்லா ப்ரென்டெர்கஸ்ட் 36 ஓட்டங்களும் எடுத்தனர். தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளும், தனுஜா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
மிகப்பெரிய வெற்றி
இந்திய அணி 304 ஓட்டங்கள் எனும் மாபெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அயர்லாந்தை வாஷ்அவுட் செய்தது.
அத்துடன் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுதான். இதற்கு முன்பு 249 ஓட்டங்கள் வித்தியாசத்தில் (2017) அயர்லாந்தை வீழ்த்தியிருந்தது.
🇮🇳 India register their BIGGEST-EVER ODI win in terms of runs and complete a whitewash! 🏆#INDvIRE pic.twitter.com/UXbJlA1inE
— Women’s CricZone (@WomensCricZone) January 15, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |