எட்டு வயது மகளை 23ஆவது மாடியிலிருந்து வீசியெறிந்த தாய்: அடுத்து தொடர்ந்த பயங்கரம்
தனது எட்டு வயது மகளை 23ஆவது மாடியிலிருந்து தூக்கி எறிந்த பெண்ணொருவர், தானும் குதித்து தன் உயிரையும் மாய்த்துக்கொண்ட பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
தாய் செய்த பயங்கரச் செயல்
மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள Panvel என்னு நகரில் வாழ்ந்துவந்த பெண்ணொருவருக்கு, தன் கணவருடன் கருத்துவேறுபாடு இருந்துள்ளது.
இந்நிலையில், நேற்று காலை இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, மகளை இழுத்துக்கொண்டு தன் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டுள்ளார் அந்த 37 வயது பெண்.
அந்த அறையிலிருந்து பால்கனிக்கு செல்ல வழி இருக்கும் நிலையில், பால்கனிக்குச் சென்ற அந்தப் பெண், தன் எட்டு வயது மகளைத் தூக்கி 23ஆவது மாடியிலிருந்து வீசிவிட்டு தானும் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ள பொலிசார், அந்தப் பெண்ணின் கணவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளார்கள்.
இதற்கிடையில், அந்தப் பெண் மன நல பாதிப்பால் அவதியுற்றுவந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |