கணவர் குளியலறையில் வழுக்கி விழுந்து இறந்ததாக கூறிய பெண்: பின்னர் தெரியவந்த உண்மை
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத் நகரில் தன் கணவர் குளியலறையில் வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாக பொலிசாரை அழைத்துள்ளார் ஒரு பெண்.
ஆனால், இறந்த நபரின் கழுத்திலிருந்த காயங்கள் பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின!
கணவர் வழுக்கி விழுந்து இறந்ததாக கூறிய பெண்
தன் கணவர் வீட்டில் வழுக்கி விழுந்துவிட்டதாகவும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறி, அவரை மருத்துவமனைக்குக் கொண்டு வந்துள்ளார் அந்த 36 வயதுப் பெண்.

அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்த மருத்துவர்கள் அவரது உடலை பரிசோதிக்கும்போது, அவரது கழுத்தில் காயங்கள் இருப்பதை கவனித்துள்ளனர்.
பொலிசாருக்கு சந்தேகம் ஏற்படவே, அவர்கள் CCTV காட்சிகளை சோதனையிட்டுள்ளார்கள்.
தொடர் விசாரணையில், முற்றிலும் வித்தியாசமான ஒரு விடயம் தெரியவந்தது. ஆம், அந்தப் பெண் தன்னை விட வயதில் குறைவான, 22 வயது இளைஞர் ஒருவருடன் தவறாக பழகத் துவங்கியுள்ளார்.
அவரது கணவருக்கு உண்மை தெரியவரவே, வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, அந்தப் பெண்ணும் அவரது ’காதலரும்’, கூட ஒரு கூட்டாளியுமாக சேர்ந்து திட்டமிட்டு அவரைக் கொன்றுவிட்டிருக்கிறார்கள்.
பின்னர் குளியலறையில் அவரது உடலைக் கொண்டு போட்டு, அவர் வழுக்கி விழுந்து, மாரடைப்பால் இறந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார் அந்தப் பெண்.
அந்தப் பெண், அவரது காதலர் மற்றும் அவர்களுக்கு உதவிய மூன்றாவது கூட்டாளி ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |