விட்டமின் மாத்திரை என்று Airpods ஜ விழுங்கிய பெண்: வைரலாகும் வீடியோ!
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஆப்பிள் Airpods pro ஐ விட்டமின் மாத்திரைகள் என நினைத்து விழுங்கியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
அமெரிக்காவை சேர்ந்த 52 வயதான டான்னா பார்கர் என்பவர் நீண்ட கால தோழியை சந்தித்துள்ளார். அச்சந்திப்பின் போது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவத்தை பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.
இதன்போது விட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள நினைத்தார். ஆகவே விட்டமின் மாத்திரை என நினைத்து தவறுதலாக Airpods pro ஐ விழுங்கியுள்ளார். இதையடுத்து சிகிச்சையளித்து தற்போது பார்கர் நலமாகவுள்ளார்.
மேலும் இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி 2.7 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |