கொழுந்தன் கேட்ட கேள்விகள்! ஆத்திரத்தில் கத்தியால் குத்தியும், வெந்நீர் ஊற்றியும் கொன்ற அண்ணி... அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி
தமிழகத்தில் கொழுந்தனை கத்தியால் குத்தியும், வெந்நீரை ஊற்றியும் கொடூரமாக கொலை செய்த அண்ணியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவரது தாய் கடந்த 23-ம் திகதி உயிரிழந்தார். இதில் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
அம்மாவை யாரும் கவனிக்காததால் தான் அவர் உயிரிழந்துவிட்டார், ஏன் இப்படி செய்தீர்கள் என தனது அண்ணன் ராஜன் மனைவி விஜிலாவிடம் கூறியுள்ளார். தன்னிடம் கொழுந்தன் சொன்ன வார்த்தைகள் மற்றும் கேள்விகளை விஜிலா தனது கணவரிடம் கூற சுரேஷ் வீட்டாருக்கும், ராஜன் வீட்டாருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு சுரேஷ் தனது அண்ணனை காண அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது விஜிலா மற்றும் அவரது மகன் அல்டின் இருவரும் சுரேஷ் தாக்கியுள்ளனர். தாக்கியத்தோடு மட்டுமல்லாமல் விஜிலா வீட்டில் இருந்த வெந்நீரை எடுத்து சுரேஷ் மீது ஊற்றியுள்ளார்.
இதில் சுரேஷ் நிலைத்தடுமாறி உள்ளார். மேலும் ஆத்திரத்தில் இருந்த விஜிலா மற்றும் அல்டின் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சுரேஷ் சரமாரியாக குத்தியுள்ளனர். 10க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்ததும் சுரேஷ் மரண பயத்தில் அலறி இருக்கிறார்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சுரேஷை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு இரண்டு மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக விஜிலாவும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.