சேட்ஜிபிடி கொடுத்த ஆலோசனை - 10 லட்ச ரூபாய் கடனை ஒரே மாதத்தில் அடைத்த பெண்
சேட்ஜிபிடி கொடுத்த ஆலோசனையால், பெண் ஒருவர் தனது ரூ.10 லட்ச கடனை, ஒரே மாதத்தில் அடைத்துள்ளார்.
ரூ19.4 லட்ச கடன்
டிஜிட்டல் யுகத்தில், சாதாரண சந்தேகங்களுக்கு பதில் அளிப்பது தொடங்கி, கோடிங் எழுதி தருவது, படங்களை உருவாக்குவது வரை பல்வேறு செயல்பாடுகளுக்கு, Open AI நிறுவனத்தின் ChatGPT யை மக்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
அதே போல், அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், ChatGPT யை பயன்படுத்தி தனது கடனில் ரூ.10 லட்சத்தை ஒரே மாதத்தில் அடைந்துள்ளார்.
அமெரிக்காவின் டெலாவேர் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயதான ஜெனிஃபர் ஆலன்(Jennifer Allan), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
அவருக்கு மகள் பிறந்த பிறகு ஏற்பட்ட மருத்துவ செலவுகள், பெற்றோர் பராமரிப்பு செலவுகள் அதிகரித்ததால், அவரது நிதி நிலைமை மோசமடைந்துள்ளது.
இதனை சமாளிக்க அவர் கிரெடிட் கார்டுகள் மூலம் அதிக கடன் வாங்க ஆரம்பித்துள்ளார். இப்படியாக அவரது கடன் தொகை 23,000 டொலராக(இந்திய மதிப்பில் ரூ.19.6 லட்சம்) அதிகரித்துள்ளது.
அவருக்கு தனது தொழிலில் நல்ல வருமானம் கிடைத்தும், பணத்தை கையாள்வது தொடர்பாக போதிய அறிவு தனக்கு இல்லாததால், கடனில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சேட்ஜிபிடி ஆலோசனை
இதனையடுத்து, தனது கடனை குறைக்க அவர் சேட்ஜிபிடியிடம் ஆலோசனை கோரியுள்ளார். செலவுகளை கட்டுப்படுவது, வருமானம் ஈட்டுவது என சேட்ஜிபிடி கடந்த ஒரு மாதத்தில், நாள்தோறும் ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளது.
பயன்படுத்தப்படாத சந்தாக்களை ரத்து செய்வது, மறந்துபோன கணக்குகளில் உள்ள பயன்படுத்தப்படாத நிதியை அடையாளம் காண்பது போன்றவற்றின் மூலம் கடனைக் குறைப்பதற்கான ஆலோசனையை வழங்கியுள்ளது.
பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு கணக்கில் மட்டும் $10,000 (ரூ.8.5 லட்சம்) இருந்துள்ளது. சேட்ஜிபிடி வழங்கிய உணவுத் திட்டம் மூலம், அவரது மாதாந்திர மளிகைக் கட்டணம் ரூ.50,000 குறைந்துள்ளது.
இப்படியாக ஒரு மாதத்தில், தனது ரூ.19.6 லட்ச கடனில், ரூ.10.3 லட்ச கடனை அடைத்துள்ளார். அடுத்த ஒரு மாதத்தில், மீதமுள்ள கடனையும் அடைக்க போவதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |