ஆணாக மாற அறுவை சிகிச்சை செய்யும் பெண் காவலர்: அனுமதி அளித்த அரசு
தான் ஆணாக மாற ஆசைப்படுவதாக கூறி, பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி கேட்ட பெண் காவலருக்கு மத்தியபிரதேச மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தீபிகா கோத்தாரி என்பவர் மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் பெண் காவலராக பணியாற்றி வருகிறார்.
பெண்ணாக பிறந்து வளர்ந்த இவர் ஆணாக தன்னை உணரும் பாலின அடையாளச் சிக்கல்களை அதிகம் எதிர்கொண்டார்.
இதனை அடுத்து பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறுவதற்கு விரும்பினார்.
தீபிகா கோத்தாரி ஓர் அரசு ஊழியர் என்பதால், தான் அறுவை சிகிச்சை பற்றி விளக்கி, கடந்தாண்டு மாநில அரசுக்கு விண்ணப்பித்தார்.
அரசு ஊழியர்களின் பாலின் மாற்ற கோரிக்கையை அனுமதிப்பது தொடர்பாக தெளிவான அரசு விதிமுறைகள் ஏதும் தற்போது நடைமுறையில் இல்லை. எனவே தனது பாலினத்தை உறுதி செய்யும் அந்த நபரின் கோரிக்கையை அரசால் தவிர்க்கவும் முடியாது.
மத்திய பிரதேசத்தில் 2021-ல் ஆர்த்தி யாதவ் என்ற பெண் காவலர் இதே போன்று அரசுக்கு விண்ணப்பித்து பாலின மாற்ற நடைமுறைக்கு அனுமதி பெற்றுள்ளார்.
அதே போன்று ஓராண்டு முன்னதாக தீபிகா கோத்தாரியும் விண்ணப்பித்திருந்தார், அவரது கோரிக்கையை மாநில உள்துறை அனுமதி வழங்கி தற்போது உத்தரவிட்டுள்ளது.
எனினும் பெண் ஊழியர்களுக்கான சலுகைகள் ஏதும் இனி தீபிகாவுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |