மகளிர் உலகக் கோப்பை: அலிசா ஹீலி அதிரடியில் இந்தியாவை வீழ்த்தி அவுஸ்திரேலியா வெற்றி!
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலிய மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் மகளிர் உலகக் கோப்பை போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஸ்மிரிதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 155 ஓட்டங்கள் அதிரடியாக குவித்தது.
ஸ்மிரிதி மந்தனா (Smriti Mandhana) 66 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 80 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
மறுபுறம் பிரதிகா ராவல் (Pratika Rawal) 96 பந்துகளில் 10 பவுண்டரி, 1 சிக்சருடன் 75 ஓட்டங்கள் குவித்தார்.
இந்தியாவின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தாலும் வீராங்கனைகளின் அதிரடி துளியும் குறையவில்லை, இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 10 விக்கெட் இழப்புக்கு 330 ஓட்டங்கள் குவித்தது.
அவுஸ்திரேலியா அபார வெற்றி
331 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய கேப்டன் அலிசா ஹீலி(Alyssa Healy) 107 பந்துகளில் 21 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என விளாசி 142 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
வலுவான தொடக்கம் அவுஸ்திரேலிய அணிக்கு கிடைத்ததால், மற்ற வீராங்கனைகளும் வெற்றிக்கான பாதையை திறம்பட முன்னெடுத்துச் சென்றனர்.
எல்லீஸ் பெரி 47 ஓட்டங்களும், ஆஷ்லி கார்ட்னர் 45 ஓட்டங்களும், போபி லிட்ச்பீல்டு 40 ஓட்டங்களும் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
இறுதியில் 49 ஓவர்கள் முடிவில் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 331 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |