மகளிர் உலகக் கோப்பை: 164 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை! இங்கிலாந்து அபார வெற்றி
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை - இங்கிலாந்து மோதல்
மகளிருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளில் நடைபெற்று வருகிறது.
இன்று இலங்கையின் கொழும்புவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி களமிறங்கியது.
நாட் ஸ்கைவர் சதம்
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்கள் குவித்து இலங்கை அணிக்கு இலக்கை நிர்ணயித்தது.
இங்கிலாந்து அணியில் நாட் ஸ்கைவர் அதிகபட்சமாக 117 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
இங்கிலாந்து அபார வெற்றி
254 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய இலங்கை அணி ஓட்டங்களை குவிக்க தடுமாறியது.
அதிகபட்சமாக ஹசினி பெராரா 35 ஓட்டங்களும், ஹர்ஷிதா சமரவிக்ரமா 33 ஓட்டங்கள் குவித்தனர்.
இங்கிலாந்து அணியின் அபார பந்துவீச்சால் இலங்கை அணி 45.4 ஓவர்கள் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ஓட்டங்கள் மட்டுமே குவித்து தோல்வியை தழுவியது.
இங்கிலாந்து அணி இதன் மூலம் 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |