ஆசிய நாடொன்றில் மனைவிகள் பற்றாக்குறை…சீனாவுக்கு கடத்தப்படும் இளம் பெண்கள்: மெகா மோசடி
நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளின் வறுமையான குடும்பத்தை சேர்ந்த பெண்களை கடத்தல் கும்பல்கள் சீனாவுக்கு கடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் குறையும் பெண்கள் விகிதம்
சீனாவில் நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த குழந்தைகள் கட்டுப்பாடு காரணமாக நாட்டில் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை சரிய தொடங்கியுள்ளது.

சீனாவில் 100 பெண்களுக்கு மொத்தம் 104 ஆண்கள் என்ற பாலின விகிதம் இருப்பதால் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையிலான வேறுபாடு எண்ணிக்கை பல கோடிகள் அதிகமாக உள்ளது,
இதனால் சீனாவில் மணப்பெண்கள் கிடைப்பது மிகவும் சிரமாக உள்ளது.
சீனாவுக்கு பெண்கள் கடத்தல்
இந்நிலையில் நேபாளம், வங்கதேசம், மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள வறுமையான குடும்பங்களை சேர்ந்த பெண்களை குறிவைத்து கடத்தல் கும்பல்கள் சீனாவுக்கு கடத்தி வருகின்றனர்.
ஆடம்பர வாழ்க்கை, கைநிறைய ஊதியம், வேலைவாய்ப்பு ஆகிய ஆசிய வார்த்தைகளை கூறி வறுமையான குடும்பத்தை சேர்ந்த பெண்களை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து சுற்றுலா விசாவில் சீனாவுக்கு அழைத்து செல்லும் கடத்தல் கும்பல்கள் சீனாவுக்கு சென்றவுடன் அங்குள்ள ஆண்களிடம் பெண்களை விற்பனை செய்து விடுகின்றனர்.

அங்கு அந்த பெண்கள் வீட்டு சிறையில் வைத்து கொடுமைப்படுத்துவதுடன், பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சீன சமூக ஊடகங்களில் திருமண தளம் என்ற போர்வையில் நேபாளப் பெண்களை ஏலம் விடுவது போன்ற நேரடி வீடியோக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |