பெண்கள் புகைபிடிப்பது முன்னேற்றம் தான்! வனிதா விஜயகுமார் சர்ச்சை பேச்சு
சினிமாவில் பெண்கள் புகைபிடிப்பதை முன்னேற்றமாக பார்க்கிறேன் என்று நடிகை வனிதா விஜயகுமார் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
சினிமா வேறு, நிஜ வாழ்க்கை வேறு
சமீபத்தில், நடிகை வனிதா விஜயகுமார் புகைபிடிப்பது போன்ற புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பெண்கள் புகைபிடிப்பது குறித்த கேள்விக்கு நடிகை வனிதா பேசிய கருத்துக்கள் மேலும் சர்ச்சை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
செய்தியாளர்கள் சந்தித்த வனிதா விஜயகுமார், " ஜெயிலர் பட இசைவெளியீட்டு விழாவின் போது நடிகர் ரஜினிகாந்த் குடிப்பழக்கம் குறித்து பேசியிருந்தார். எல்லோரும், குடிப்பழக்கத்தை பற்றியும், புகைப்பழக்கத்தை பற்றியும் பேசுவார்கள். ஆனால், சினிமா வேறு, நிஜ வாழ்க்கை வேறு. சினிமாவையும், வாழ்க்கையையும் ஒன்றாக இணைத்து பார்க்காதீர்கள்" என்றார்.
நடிகைகள் செய்தால் மட்டும் சர்ச்சை
மேலும் பேசிய அவர், "திரைப்படங்களில் நடிகர்கள் புகைபிடித்தால் மட்டும் அதனை வரவேற்கிறீர்கள். நடிகைகள் அதை செய்தால் சர்ச்சையாக்குகிறீர்கள். நான் அதை முன்னேற்றமாக தான் பார்க்கிறேன். காலம் மாறிக்கொண்டே வருகிறது. நாம் அதை வரவேற்க வேண்டும்.
நடிகைகள் படத்தில் புகைபிடித்தால் நிஜத்திலும் அப்படி செய்வார்கள் என்று சொல்ல முடியாது. அது அவர்களுடைய தனிப்படை விஷயம்.
நான் படத்தில் புகைப்பிடிப்பதை போன்று நடித்தது படத்தினுடைய தேவை. அதனை நீங்கள் என்னுடை தனிப்பட்ட வாழ்க்கையிலும் அப்படி தான் இருக்கும் என்று சர்ச்சையாக்க வேண்டாம்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |