கொழும்பில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இலங்கை: இதுவரை எத்தனை முறை வீழ்த்தியிருக்கிறது?
நடப்பு மகளிர் தொடரில் இலங்கை அணி இன்று கொழும்பில் இங்கிலாந்தை சந்திக்கிறது.
நேருக்குநேர்
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் கொழும்பில் இன்று நடைபெற உள்ள மகளிர் உலகக்கிண்ணப் போட்டியில் மோதுகின்றன.
An enticing #CWC25 contest in Colombo today with unbeaten England taking on Sri Lanka 🤔
— ICC (@ICC) October 11, 2025
Details on how to watch #ENGvSL 📺 https://t.co/7wsR28PFHI pic.twitter.com/C6Z0uqjY7i
நடப்பு தொடரில் இலங்கை அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவுடன் தோல்வியுற்றது.
அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவுடன் மோதவிருந்த போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனால் முதல் வெற்றியை பெறும் முனைப்புடன் இங்கிலாந்தை இன்று இலங்கை எதிர்கொள்கிறது.
இந்த இரண்டு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. அதில் இலங்கை அணி ஒருமுறை மட்டுமே இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது.
2013ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 239 ஓட்டங்கள் இலக்கை எட்டி, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |