பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி ஒரு திருநங்கை என வதந்தி பரப்பிய பெண்கள்: வைரலானதையடுத்து அவர் எடுத்துள்ள நடவடிக்கை
ஆவிகளுடன் பேசும் ஒரு பெண்ணும் பத்திரிகையாளரான ஒரு பெண்ணும், பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் (44) மனைவி ஒரு திருநங்கை என்று கூறி சமூக ஊடகங்களில் வெளியிட்ட வதந்தி வைரலானது.
அவர்கள், பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் மனைவியும், பிரான்சின் முதல் பெண்மணியுமான பிரிஜிட் மேக்ரான் (68)ஒரு ஆணாகப் பிறந்தவர் என்றும், அவரது உண்மையான பெயர் Jean-Michel Trogneux என்றும் சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருந்தனர்.
அந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ட்விட்டரில் அந்த செய்தி பகிரப்பட்டு, #JeanMichelTrogneux என்ற ஹேஷ்டேகின் கீழ் பரவலாக உலாவந்துள்ளது, ரீட்வீட்டும் செய்யப்பட்டது.
பிரான்சில் ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் இந்த செய்தி வைரலாகியுள்ள நிலையில், பிரிஜிட் அந்த பெண்கள் இருவர் மீதும் வழக்குத் தொடர்ந்துள்ளார். அத்துடன், பிரிஜிட்டின் முதல் கணவருக்குப் பிறந்த அவரது மூன்று பிள்ளைகளும், அவரது சகோதரரும் இணைந்து வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
தனியுரிமை மற்றும் அடிப்படை தனி உரிமைகளை மீறுதல், மற்றும் பிரிஜிட்டின் புகைப்படத்தை சட்டத்துக்கு விரோதமாக பயன்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள இந்த வழக்கில், முதல் விசாரணை ஜூன் 15 அன்று பாரீஸில் துவங்க உள்ளது.