மகளிர் படைகளால் களைகட்டிய பிரித்தானிய நகரம்! காமன்வெல்த் கோலாகல தொடக்கம்
காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட் இடம்பெற்றுள்ள நிலையில், பிரித்தானியாவில் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது.
2022ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் பெர்மிங்காமில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இன்று தொடங்கும் 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆகத்து 8ஆம் திகதி வரை நடக்க உள்ளது.
இதில் மகளிர் கிரிக்கெட், நீச்சல்,தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, ஆக்கி, மல்யுத்தம், ஸ்குவாஷ் உள்பட 20 விளையாட்டுகளில் மொத்தம் 280 பந்தயங்கள் நடைபெற உள்ளன.
மகளிர் கிரிக்கெட் இதில் இடம்பெற்றுள்ள நிலையில், 8 அணிகளைச் சேர்ந்த வீராங்கனைகள் தங்கள் நாட்டின் கொடியுடன் மகிழ்ச்சியுடன் தொடக்க விழாவில் பங்குபெற்றனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
PC: Twitter (@englandcricket)
இன்று தொடங்கும் முதல் காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. அவுஸ்திரேலிய அணியின் கேப்டனாக மெக் லென்னிங்கும், இந்திய அணியின் கேப்டனாக ஹர்மான்ப்ரீத் கவுரும் செயல்பட உள்ளனர்.
PC: Twitter (@WomensCricZone)
முன்னதாக, காமன்வெல்த் போட்டிகளில் பங்குபெறும் இந்திய மகளிர் அணி மற்றும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என விராட் கோலி வாழ்த்து கூறியிருந்தார்.
PC: Twitter (@WomensCricZone)
PC: Twitter (@WomensCricZone)