மாப்பிள்ளை தாடி வைத்திருந்தால் திருமணத்திற்கு வரமாட்டோம்.., கிராம மக்கள் வினோத முடிவு
மாப்பிள்ளை தாடி வைத்திருந்தால் திருமணத்திற்கு வரமாட்டோம் என்று கிராமம் ஒன்றில் உள்ள மக்கள் முடிவு எடுத்துள்ளார்.
கிராம மக்கள் முடிவு
தற்போதைய காலத்தில் பேஷன் என்பது பரவலாக காணப்படுகிறது. முந்தைய காலத்தில் உடைகளுக்கு மட்டும் பேஷன் என்பது இருந்தது. ஆனால் தற்போது தலை முடி, தாடி வைப்பதிலும் பல ஸ்டைல்கள் உள்ளன.
ஷிப்பி, டிஸ்கோ, முல்லட், பாக்ஸ், பங்க் போன்று வைத்துக்கொண்டு தங்களது முடிகளை இளைஞர்கள் அழகு படுத்திக் கொள்கின்றனர்.
அதேபோல, கடந்த கால திருமணங்களில் மணமகன் கிளீன் ஷேவ் செய்து இருப்பார். ஆனால், தற்போது மணமகன் தாடி வைத்துக் கூட மணமேடையில் அமர்ந்திருக்கிறார்.
இந்நிலையில், புதுவை மாநில காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு மீனவ கிராம மக்கள் புதுவிதமான முடிவை எடுத்துள்ளனர்.
அதாவது அவர்கள், திருமணத்தின் போது மணமகன் தாடி வைத்திருந்தால் அந்த திருமண விழாவில் கிராம மக்கள் யாரும் கலந்து கொள்வதில்லை என்று முடிவு எடுத்துள்ளனர்.
மேலும், மணமகளுக்கு சம்மதம் இருந்தால் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கு பலரும் உடன்பாடு தெரிவித்துள்ளனர். ஆனால், தனி மனிதர் விடயத்தில் தலையிடுவதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |