மோட்டார் வீட்டை நிறுத்த போராடி வென்ற பிரித்தானியர்
பிரித்தானியாவில் நபர் ஒருவர் தனது பழைய மோட்டார்ஹோம்களை வீட்டிற்கு வெளியே நிறுத்த, கவுன்சிலுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற்றார்.
பிரித்தானியாவின் Worcester-வை சேர்ந்தவர் மைக் பெர்கின்ஸ். இவர் Motorhome (வாகனத்தை வீடாக மாற்றி பயன்படுத்துதல்) ஒன்றை வைத்துள்ளார்.
கடந்த மாதம் மைக்கிற்கு Worcester City கவுன்சிலில் இருந்து வந்த கடிதத்தில், அவரது 'பாழடைந்த வேன்' அப்பகுதியின் வசதியை சேதப்படுத்துகிறது என்று கூறப்பட்டிருந்தது.
பல புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து மோட்டார் வீட்டை நகர்த்த உத்தரவிடப்பட்டது. நகர மற்றும் கிராமப்புற திட்டமிடல் சட்டம் 1990யின் பிரிவு நோட்டீஸ், அவரது வீட்டின் முன் வேன் மற்றும் இரண்டு வாகனங்களை நிறுத்த தடை விதித்தது.
ஆனால், மைக் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். இதற்காக அவர் சிவில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்தது.
இறுதியில் கவுன்சில் பின்வாங்கியதால் மைக் பெர்கின்ஸ் தனது வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் தனது குடும்பத்தை இனி முகாம் விடுமுறைக்கு அழைத்துச் செல்லலாம்.
கவுன்சில் எந்த புகார்களுக்கும் ஆதாரங்களை வழங்கவில்லை என்றும், நெருக்கமான அயலயவர்கள் வாகனங்களை பேசும் இடமாக கருதுகிறார்கள், வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்று மைக் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |