வாரத்திற்கு 4 நாள் வேலை திட்டம்! ஆய்வின் முடிவால் மகிழ்ச்சியில் பிரித்தானிய நிறுவனங்கள்
பிரித்தானியாவில் செயல்படுத்தப்பட்டு வந்த வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை என்ற சோதனைத் திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
4 நாள் சோதனை திட்டம்
பிரித்தானியாவில் வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை என்ற பரிசோதனை திட்டத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பல்வேறு துறைகளை சார்ந்த 61 நிறுவனங்கள் செயல்படுத்தி வந்த நிலையில் இந்த திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை திட்டத்தின் மூலம் சில சுவாரசியமான மாற்றங்கள் காணப்பட்டதாக ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து சோதனையில் ஈடுபட்ட பாஸ்டன் கல்லூரியின் பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளரான ஜூலியட் ஷோர் தெரிவித்துள்ளார்.
Getty
மேலும் இந்த சோதனை திட்டத்தின் மூலம் பணியாளர்கள் அவர்களது வேலை நேரத்தை சாரசரியாக அதிகரித்ததை கண்டோம், அதே போன்று உற்பத்தி மற்றும் கட்டுமான துறைகளில் பணிப் புரியும் ஊழியர்கள் தீக்காயம் மற்றும் தூக்க பிரச்சனைகளில் இருந்து பெரும் அளவு வெளியேறியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
சோதனை திட்டம் வெற்றி
கிட்டத்தட்ட 61 நிறுவனங்கள் இந்த நான்கு நாட்கள் சோதனை திட்டத்தை செயல்படுத்தி வந்த நிலையில், 91 சதவீத நிறுவனங்கள் இந்த திட்டத்தை தொடர போவதாகவும், 4 சதவிகித நிறுவனங்கள் இது குறித்து ஆராய்ந்து முடிவு எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
வெறும் 4 சதவிகித நிறுவனங்கள் மட்டுமே இதனை தொடரப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.
Getty
நான்கு நாள் வேலை திட்டத்திற்கு 10க்கு 8.5 என்ற மதிப்பீட்டை நிறுவனங்கள் வழங்கியுள்ளன, 7.5 சதவிகித மதிப்பீடுகள் உற்பத்தி மற்றும் வணிக செயல்திறன் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த திட்டத்தின் மூலம் நிறுவனங்களின் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், வ்ருவாய் 35 சதவிகிதம் உயர்ந்து இருப்பதுடன் வேலை வாய்ப்புகளும் பெருகியுள்ளன என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.