வேலை-வாழ்க்கை சமநிலை உள்ள நாடுகளின் பட்டியல்; நியூசிலாந்து முதலிடம் - இந்தியாவின் நிலை என்ன?
வேலை-வாழ்க்கை சமநிலை உள்ள நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
Work Life Balance
வேலை மற்றும் வாழ்க்கை சமநிலை உள்ள 60 நாடுகளின் தரவரிசை பட்டியலை சர்வதேச வேலைவாய்ப்பு நிறுவனமான Remote வெளியிட்டுள்ளது.
வருடாந்திர விடுப்பு, ஊதியத்துடன் கூடிய நோய்வாய்ப்பட்ட விடுப்பு, மகப்பேறு விடுப்பு, வேலை நேரம், குறைந்தபட்ச ஊதியம், மகிழ்ச்சி குறியீடு போன்றவற்றை அடிப்படையாக வைத்து இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து முதலிடம்
இந்த பட்டியலில், தொடர்ந்து 3வது ஆண்டாக நியூசிலாந்து முதலிடம் பெற்றுள்ளது. 32 நாள் வருடாந்திர விடுப்பு மற்றும் வாரத்திற்கு 33 மணி வேலை நேரத்துடன், 86.87சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.
வேலை-வாழ்க்கை சமநிலை உள்ள முதல் 10 நாடுகள் பட்டியல்
1. நியூசிலாந்து
2. அயர்லாந்து
3. பெல்ஜியம்
4. ஜேர்மனி
5. நோர்வே
6. டென்மார்க்
7. கனடா
8. அவுஸ்திரேலியா
9. ஸ்பெயின்
10. பின்லாந்து
முதல் 10 இடங்களில் எந்த ஒரு ஆசிய நாடோ, MENA நாடுகளோ இடம் பெறவில்லை.
இந்தியாவின் நிலை?
35 நாள் வருடாந்திர விடுமுறை மற்றும் வாரத்திற்கு 45.72 மணி வேலை நேரத்துடன், 45.81சதவீதத்துடன் இந்தியா 42வது இடத்தில் உள்ளது.
பிரித்தானியா 11வது இடத்திலும், பிரான்ஸ் 16வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 23வது இடத்திலும், சிங்கப்பூர் 25வது இடத்திலும், மலேசியா 27வது இடத்திலும், சவுதி அரேபியா 35வது இடத்திலும் உள்ளன.
மேலும், இஸ்ரேல் 36வது இடத்திலும், ஐக்கிய அரபு அமீரகம் 40 வது இடத்திலும், ரஷ்யா 43வது இடத்திலும், ஈரான் 49 வது இடத்திலும், கத்தார் 53வது இடத்திலும், அமெரிக்கா 59 இடத்திலும் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |