ஆறு மாதங்களில் 80,000 வெளிநாட்டவர்களுக்கு பணி விசாக்கள்: தகுதியுடையோருக்கு வாய்ப்பும் உள்ளது
ஆறு மாதங்களில், 80,000 வெளிநாட்டவர்களுக்கு பணி விசா வழங்கியுள்ளது ஜேர்மனி.
ஆறு மாதங்களில் 80,000 பேருக்கு பணி விசாக்கள்
ஜேர்மனி, 2024ஆம் ஆண்டின் முதல் பகுதியில், அதாவது, ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் 80,000 வெளிநாட்டவர்களுக்கு பணி விசா வழங்கியுள்ளதாக ஜேர்மன் பெடரல் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவற்றில் 40,000 விசாக்கள் திறன்மிகுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 3,000 அதிகமாகும்.
2023ஆம் ஆண்டில் 570,000 பணியிடங்கள் ஜேர்மனியில் காலியாக இருந்ததாக, ஜேர்மன் பொருளாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு ஒன்று தெரிவித்திருந்தது.
இன்னும், போக்குவரத்து, உற்பத்தி, கட்டுமானம், பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் பணியாளர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், அது நாட்டின் பொருளாதாரத்தை தொடர்ந்து பாதித்துவருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தகுதியுடையோர் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |