அன்று ஹொட்டல் ஊழியர்... இன்று அமெரிக்காவில் அதிக சம்பளம் பெறும் 10 CEOக்களில் ஒருவர்
அமெரிக்காவில் பெண் தலைமை நிர்வாக அதிகாரிகளில் அதிக சம்பளம் வாங்கும் முதல் 10 பேர்களில் ஒருவராக தெரிவாகியுள்ள யாமினி ரங்கன் திடீர் கவனம் பெற்றுள்ளார்.
ஆண்டுக்கு 2.57 மில்லியன்
அமெரிக்காவில் அதிக சம்பளம் வாக்கும் பெண் தலைமை நிர்வாக அதிகாரிகள் பட்டியலில் யாமினி ரங்கன் மட்டுமே இந்திய வம்சாவளி நபர்.
குறித்த பட்டியலில் 8வது இடத்தில் இருக்கும் யாமினி ரங்கன் ஆண்டுக்கு 2.57 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பளமாக வாங்குகிறார்.
இதே பட்டியலில் Coty Inc நிறுவனத்தின் Sue Nabi, Levi Strauss & Co நிறுவனத்தின் Michelle Gass, Accenture PLC நிறுவனத்தின் Julie Sweet மற்றும் Citigroup Inc நிறுவனத்தின் Jane Fraser ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
இந்தியாவில் பிறந்த யாமினி ரங்கன் தமது 21வது வயதில் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். தற்போது பல மில்லியன் டொலர் சம்பளம் வாங்கினாலும், தொடக்கத்தில் அவரது அமெரிக்க வாழ்க்கை சவால் நிறைந்ததாகவே இருந்துள்ளது.
எதிர்பார்த்த வேலை வாய்ப்புகள் எட்டாக்கனியாகவே இருக்க, பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டார். தொடர்ந்து அட்லாண்டா கால்பந்து மைதானத்தில் ஒரு ஹொட்டலில் ஊழியராக பணிபுரிந்தார்.
சொத்து மதிப்பு ரூ 263 கோடி
கணினிப் பொறியியலில் இளங்கலைப் பட்டப்படிப்பும், எம்பிஏ பட்டமும் பெற்றிருந்தாலும், உரிய வேலை கிடைக்காமல் யாமினி தவித்தார். ஆனால் SAP, Lucent, Workday, மற்றும் Dropbox ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியதன் பின்னரே அவரது நிலை மாறத்தொடங்கியது.
2020ல் HubSpot நிறுவனத்தின் இணைந்த அவர் ஒரே ஆண்டில் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.
இன்று யாமினி ரங்கனின் சொத்து மதிப்பு என்பது ரூ 263 கோடி. அமெரிக்காவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இந்திய வம்சாவளி பெண் தலைமை நிர்வாக அதிகாரி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |