நேபாள சுரங்கத்திற்குள் இன்னமும் சிக்கியுள்ள பல நூறு பேர்கள்
933 workers trapped in Nepal tunnels: நேபாள சுரங்கப்பாதைகளில் குறைந்தது 933 தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாகக் கருதப்படுகிறது.
சுமார் அரை டசின் நீர்மின் திட்டங்களில் உள்ள சுரங்கங்களில் குறைந்தது 933 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.

நேபாள வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 4,247 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 900-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், நீர்மின் திட்டங்களில் உள்ள சுரங்கங்களில் குறைந்தது 933 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அப்பர் திரிசூலி வளாகத்தில், சுமார் 350 பேர் சிக்கியிருக்கக்கூடும் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தனர்.
இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த ராணுவத்தினர் மற்றும் சிறப்புப் படைகள் பங்கேற்கும் ஒரு பிரம்மாண்டமான மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
ஞாயிற்றுக்கிழமையன்று ராணுவம் தொலைதூரப் பகுதிக்கு ஹெலிகொப்டர் மூலம் இயந்திரங்களைக் கொண்டு சென்றதுடன், மீட்புப் படையினர் சுரங்கத்தின் ஒன்றின் நுழைவாயிலில் இருந்து இடிபாடுகளை அகற்றும் பணியைத் தொடங்கியுள்ளனர்.
புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நுவாகோட் மற்றும் ரசுவா மாவட்டங்களில் அமைந்துள்ள திரிசூலி ஆற்றின் 'அப்பர் திரிசூலி ஹைட்ரோபவர் 3A' மற்றும் '3B' ஆகியன ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மின் நிலையங்களாகும்.
இதனிடையே, சுரங்கங்களில் ஒன்றின் வாயிலிலிருந்து சேறு படிந்த நிலையில் வெளியே இழுக்கப்பட்ட இருவரைக் காட்டும் புகைப்படத்தை நேபாள ராணுவம் முன்னதாக வெளியிட்டிருந்தது.
சுரங்கத்திற்குள் சுமார் 180 மீற்றர் தொலைவில் முக்கியப் பணி நடைபெறும் பகுதி அமைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த இடத்தை அடைவது, அங்கு கடந்த ஆறு நாட்களாகச் சிக்கியிருப்பவர்களின் நிலை குறித்த தகவலை அறிய வாய்ப்பாக அமையும்.

இந்த நிலையில், 2க்கு 3 அடி அளவுள்ள துளையின் வழியாக மீட்புக் குழுவினர் கீழே இறங்கியதாகவும், அந்தத் துளை விரிவுபடுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
ஆனால், இதுவரை உள்ளிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்றே அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்களின் நிலை குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |