பிரித்தானியாவில் வேலை செய்யும் ஆசையுடன் வந்த வெளிநாட்டவர்: கிடைத்த ஏமாற்றம்!

United Kingdom
By Balamanuvelan Dec 02, 2022 12:25 PM GMT
Report

பிரித்தானியாவில் வேலை கிடைக்கும் என தெரிந்ததும், மகிழ்ச்சியுடன் புறப்பட்ட வெளிநாட்டவர் ஒருவருக்கு பெரும் ஏமாற்றமே பலனாகக் கிடைத்தது.

பழங்கள் பறிக்கும் வேலைக்காக வந்த வெளிநாட்டவர்

 இந்தோனேசியாவிலிருந்து ஹீத்ரோ விமான நிலையத்தில் வந்திறங்கிய Agung, புது வாழ்வு துவங்கிவிட்டதுபோல் உணர்ந்தார்.

சொந்த நாட்டில் வாழும் தாய் மற்றும் சகோதார சகோதரிகளுக்கு உதவுவதற்காக, ஆறு மாதங்கள் வேலை செய்து பணம் சம்பாதிக்கலாம் என்பது அவருடைய எண்ணம். ஆனால், அவருக்கு ஒரு விடயம் தெரியாது...

ஏற்கனவே துவங்கிவிட்ட சீஸன்

பிரித்தானியாவில் பழம் பறிக்கும் சீஸன் துவங்கிவிட்டது என்ற உண்மை தெரியாமலே கனவுகளுடன் வந்திறங்கிய உடனேயே Agungக்கு முதல் அதிர்ச்சி காத்திருந்தது.

அது, அவர் வாழும் இடத்திலிருந்து, அவர் வேலை செய்யும் Aberdeenshire என்ற இடத்தில் அமைந்துள்ள பண்ணைக்குச் செல்வதற்கே அவர் 95 பவுண்டுகள் செலவிடவேண்டும் என்பது தெரியவந்ததுமே அதிர்ச்சியடைந்தார் Agung.

பிரித்தானியாவில் வேலை செய்யும் ஆசையுடன் வந்த வெளிநாட்டவர்: கிடைத்த ஏமாற்றம்! | Working In Uk Leaves Fruit Pickers

 Sam Frost/The Guardian

சொந்த நாட்டில் 4,650 பவுண்டுகள் வட்டிக்குக் கடன் வாங்கித்தான் பிரித்தானியாவுக்கு வந்திருந்தார் Agung.

இங்கு வந்து வேலையில் சேர்ந்தபோது அவருக்கு மற்றொரு அதிர்ச்சி கிடைத்தது. ஆம், அவரால் அவருக்குக் கொடுக்கப்பட்ட இலக்கை எட்டமுடியவில்லை.

அதாவது, காலை 5.00 மணியளவில் ஸ்ட்ராபெர்ரி முதலான பழங்களைப் பறிக்கத் துவங்கவேண்டுமாம்.

9.00 மணியளவில் மேற்பார்வையாளர்கள் வந்து அவர் எவ்வளவு பழங்கள் பறித்துள்ளார் என்று பார்ப்பார்களாம். போதுமான அளவு பழங்கள் பறிக்கவில்லையென்றால், அவர் திருப்பி அனுப்பப்படுவார்.

அன்று அவருக்கு வேலை கிடையாது. ஆக, Agung கஷ்டப்பட்டு வேலை செய்து பெற்ற ஊதியம் வாரம் ஒன்றிற்கு 200 பவுண்டுகள் மட்டுமே...

சரி எப்படியாவது வீட்டுக்கு பணம் அனுப்பவேண்டுமே என்ன செய்வது என்று எண்ணி, பல வேளைகள் உணவை தவிர்த்துள்ளார் Agung.

இதற்கிடையில், Agungக்கு மேலும் ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், போதுமான பழங்கள் பறிக்கவில்லை என மூன்று முறை எச்சரிக்கப்பட்ட Agung, பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அவர் மொத்தம் சம்பாதித்த பணம், வெறும் 1,500 பவுண்டுகள். அந்த வேலை போனதால், சொந்த செலவில் கென்டுக்கு பயணித்த Agung, அங்கு ஆப்பிள் பறிக்கும் வேலையைச் செய்துள்ளார்.

சோதனை மேல் சோதனை என்பதுபோல, ஆப்பிள் பழங்கள் சீஸன் முடிந்துவிட்டது. அதாவது, இனி பறிக்க ஆப்பிள் பழங்கள் இல்லை.

தான் வட்டிக்கு வாங்கிய கடனை எப்படிக் கொடுத்துத் தீர்ப்பது என்று தெரியாமல் திகைத்துப் போயிருக்கிறார் Agung.

Agungஐப் போலவே, இந்தோனேசியாவிலிருந்து அவருடன் பிரித்தானியாவுக்கு வேலைக்கு வந்தவர்தான் Mochtar.

அவரும் கடன் வாங்கித்தான் பிரித்தானியாவுக்கு வந்தார். ஆனால், அவர் Agungஐ விட கொஞ்சம் கூடுதலாக பழங்கள் பறித்ததால், அவருக்கு வாரம் ஒன்றிற்கு 300 பவுண்டுகள் கிடைத்தது.

அவரால் வீட்டுக்கு மாதம் ஒன்றிற்கு 100 பவுண்டுகள்தான் அனுப்பமுடிகிறதாம்.

இப்படி ஏமாந்து போய் இங்கே இருப்பதைவிட சொந்த ஊருக்கே ஊருக்கே திரும்பிவிட விரும்புவதாகத் தெரிவிக்கிறார் Mochtar.

ஆனால், இன்னொருபக்கம், வெட்கமாக உணர்கிறேன் என்கிறார் அவர். 

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US