300 கலோரிகள் வரை எரிக்க உதவும் எளிமையான உடற்பயிற்சிகள்! தினமும் செய்தாலே போதும்
பொதுவாக அதிகமான கலோரிகள் உடலில் சேரும்போது அவை கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிப்பிற்கு வழி வகுக்கின்றன.
இதற்கு சில எளிய பயிற்சிகள் உள்ளன, அவற்றை பின்பற்றுவதன் மூலம் அதிகப்பட்சமாக ஒரு நாளைக்கு 300 கலோரிகளை நாம் எரிக்க முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
ட்ராப் ஸ்குவாட் அல்ட் ஃப்ளோர் டச்
உங்கள் கால்களை சற்று அகலமாக வைத்துக்கொள்ளவும். இரண்டு பாதங்களும் இணையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கால் விரல்களை சற்று வெளியே நீட்டி வைத்துக் கொள்ளவும். இப்போது கைகளில் டம்பள்ஸ்களை எடுத்துக்கொள்ளவும். நேராக நிற்கவும். பிறகு கீழே குனிந்து மேலே எழுந்திருக்கவும்.
எழுந்திருக்கும்போது குதிக்கவும். இந்த நிலையில் டம்பள்ஸ் உங்கள் கைகளிலேயே இருக்க வேண்டும். இந்த முறையை மீண்டும் மீண்டும் செய்யவும்.
பவர் ஸ்பிரிண்ட்
நமது உடலை சூடாக்க கூடிய பயிற்சியாகும். இது ஒரு ஓட்ட பயிற்சியாகும். உங்களால் முடிந்த அளவு வேகமாக ஓடவும்.
ஓடும்போது உங்களால் முடிந்த அளவு கால்களை உயர்த்தவும். இது கால்களுக்கு நன்மை பயக்கக்கூடிய பயிற்சியாக உள்ளது.
ஸ்ப்லிட் லங் டூ ட்ராப் ஸ்குவாட்
முதலில் உங்கள் உடலை நேராக வைத்துக்கொள்ளவும். உங்கள் முதுகு பகுதி நேராக இருக்க வேண்டும். இப்போது உங்கள் தோள்களை தளர்த்தி கைகளை இடுப்பில் வைக்கவும்.
பிறகு இடது முழங்காலை 90 டிகிரி கோணத்தில் மடக்கி குனியவும், இந்த நிலையில் வலது காலானது முன்னோக்கி செல்ல வேண்டும். தொடர்ந்து உடலை கீழறக்கி வலது காலை முன்னோக்கி உயர்த்தவும். இப்போது மீண்டும் ஆரம்ப நிலைக்கு வரவும்.
கிக் டபுள் போகோ ஜம்ப்
உங்கள் கைகளை தலைக்கு பின்னால் வைத்துக் கொள்ளவும். மிகக் குறைந்த அளவில் முழங்காலை மடக்கி மேல்நோக்கி குதிக்கவும். கிட்டத்தட்ட இது தவளை குதிப்பது போன்ற செய்முறை ஆகும்.
ஆனால் தவளை முறையிலேயே கைகளை பயன்படுத்தாமல் இதை நாம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை குதிக்கும் போதும் இடுப்பு மற்றும் முழங்காலுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது. மேலும் கணுக்கால் பலமடைகிறது.
ஒவ்வொரு முறை அமரும்போதும் விரைவாக தரையில் இருந்து குதிக்கவும். இதை மொத்தமாக இரண்டு முறை செய்யலாம்.
உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு ஒரு முறை செய்வதே கடினமாக இருக்கலாம். எனவே அவர்கள் இந்த பயிற்சி கடினமாக இருந்தால் வேறு பயிற்சிகளை செய்யலாம்.