உலகின் முதல் பறக்கும் காரின் உற்பத்தி தொடக்கம் - விலை என்ன தெரியுமா?
ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பறக்கும் கார்களை பாத்திருப்போம். தற்போது அத்தகைய பறக்கும் கார்கள் நடைமுறைக்கு வர உள்ளது.
உலகின் முதல் பறக்கும் கார்
அமெரிக்காவை தளமாக கொண்ட Alef Aeronautics நிறுவனம், Alef Model A Ultralight 2 என்ற உலகின் முதல் பறக்கும் காரின் உற்பத்தியை தொடங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த காரை வழக்கமான கார் போல 4 சக்கரங்களுடன் சாலையில் ஓட்டவும் முடியும், சாலையில் ஒட்டிக்கொண்டிக்கும் போதே, ரெக்கை இல்லாமல், நிற்கும் இடத்தில் இருந்தே செங்குத்தாக Take off செய்து பறப்பில் ஈடுபடவும் முடியும்.
ஒரு முறை சார்ஜ் செய்தால் 350km வரை சாலையில் ஓடவும், 170km பறக்கவும் முடியும். இந்த வாகனம் 100% மின்சாரத்தில் இயங்க கூடியது.
இந்த கார், சாலையில் அதிகபட்சமாக மணிக்கு 40 கிமீ வேகத்திலும், பறக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 117 கிமீ வேகத்திலும் இயங்கும்.

இந்த கார் சுமார் 5 மீட்டர் நீளமும் 2 மீட்டர் அகலமும் 385 கிலோ எடையும் கொண்டது. இதில் ஒரு ஓட்டுநரும், ஒரு பயணியும் பயணிக்க முடியும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு முதலில் வழங்கப்பட்டு மிகுந்த சோதனைக்கு பின்னர், பொது சந்தைக்கு வரும் என Alef Aeronautics நிறுவனம் தெரிவித்துள்ளது.
Alef's flying car is taking the fiction out of sci-fi pic.twitter.com/6wFywSeb8A
— Mashable (@mashable) December 8, 2025
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இது வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் விலை, 3 லட்சம் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.2.7 கோடி) இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் உற்பத்தி முழுமையாக தானியங்கிமயமாக்கப்பட்டவுடன் ரூ.30 லட்சம் விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை 1 பில்லியன் டொலர் மதிப்பில், 3,500 காருக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |